வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
செக் மோசடி வழக்கில் ஏப்ரல் 3-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நடிகை ரோஜாவுக்கு உத்தரவு
சென்னை:
செக் மோசடி வழக்கில் ஏப்ரல் 3-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று நடிகை ரோஜாவுக்கு ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் 8-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் மேரி கிளாடு உத்தரவிட்டார்.
சினிமா ஃபைனான்சியர் முகன்சந்த் போத்ராவிடம் வாங்கிய கடனுக்காக ரூ.8 லட்சத்துக்கு ரோஜா வங்கிக் காசோலை வழங்கினார். ஆனால், அவரது கணக்கில் பணமில்லாததால் வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து ரோஜா மீது செக் மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ் வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால், நீதிமன்றத்தில் ரோஜா ஆஜராகவில்லை.
இவ் வழக்கை பலமுறை ஒத்திவைத்தாகிவிட்டது. ஒரு முறை கூட நீதிமன்றத்தில் ரோஜா ஆஜராகவில்லை. ஏப்ரல் 3-ம் தேதி நீதிமன்றத்தில் ரோஜா கட்டாயம் ஆஜராகவேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையே, இவ் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ரோஜா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி ரோஜா தாக்கல் செய்த மனுவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி எஸ்.எஸ்.பி. தர்வேஷ் புதன்கிழமை தள்ளபடி செய்தார்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications