வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலக மாட்டேன்: வாழப்பாடி
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நான் விலக மாட்டேன். அக்கூட்டணிக்கட்சியில் நானும் ஒருவன். கண்டிப்பாய் அக்கட்சியில் தான் நான் இறுதி வரை இருப்பேன் என்று வாழப்பாடி ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறினார்.
செவ்வாய்க்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கலந்து கொள்ளவில்லை. கூட்டம் முடிந்த பின் நிருபர்கள் வாழப்பாடி ராமமூர்த்தியைச் சந்தித்தனர்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சிக்கும், தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எங்களுக்கும் பலநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. அதாவது அக்கட்சியைச் சேர்ந்த காடுவெட்டி குரு, வாழப்பாடியின் தலையைக் கொண்டு வா என்று கூறியதாக பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.
அவர்கள் இப்படி அறிக்கை விட்டுவிட்டு தமிழகம் முழுவதும் எனது உருவ பொம்மைகளைக் கொளுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
என் தலைக்கே விலை அவர்கள் விலை பேசிவிட்டார்கள். இது என்னை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தலைவர்கள் எடுத்த முடிவு என்னை மிகுந்த மன வருத்தத்திற்குள்ளாக்கியது என்றும் அவர் பேட்டியின் போது கூறினார்.
அரசியலில் நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக உணர்கிறீர்களா? என்று கேட்டபோது அப்படி எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications