For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

மின்சாரக் கனவு படத்தைத் தொடர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர். பம்பாய் படத்தில் அரவிந்த்சாமி நடித்த ரோலில், இவரை நடிக்க அழைத்தார் இயக்குநர் மணிரத்னம். நடிக்க மறுத்த ராஜீவ் மேனன் அப் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற சம்மதித்தார்.

மலையாளத்தில் பாசில் இயக்கிய ஹரிகிருஷ்ணாஸ் என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். ராஜீவ் மேனன் தான் தயாரித்து இயக்கும் விளம்பரப் படத்துக்கு தானே இசை அமைத்து பாடவும் செய்கிறார். இவர் மனைவி லதாவும், ஒரு சிறந்த விளம்பரப் பட இயக்குநர் என்பது கூடுதல் தகவல்.

ராஜீவ் மேனனின் அம்மாதான் பிரபல பாடகி கல்யாணி மேனன். அண்மையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கடவுள் வாழ்த்துப் பாடிய அம்மாவை மேடையில் தனக்கு அருகிலேயே உட்கார வைத்துக்கொண்டார் ராஜீவ் மேனன்.

முதல் கேசட்டை கமல்ஹாசன் வெளியிட அதை கல்யாணி மேனன் பெற்றுக் கொண்டார். முதல் கேசட்டை அம்மா பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே மேடையில் தனக்கு அருகிலேயே ராஜீவ் மேனன் உட்கார வைத்துக் கொண்டார் என்ற ரகசியம் அப்போதுதான் வெட்டவெளிச்சமாகியது.

ராஜீவ் மேனனின் தந்தை மேனன், ஒரு கப்பல் படை அதிகாரி. வங்கதேசப் போரில் வீர மரணம்அடைந்தார்.

இசைக்க வந்து நடிகரான ராகவேந்தர்

சிறந்த இசைஞானம் உள்ளவர் நடிகர் டி.எஸ். ராகவேந்தர். பல படங்களில் தனது இசைஞானத்தை வெளிக்காட்டியுள்ளார்.

இசை அமைப்பாளராகவேண்டும் என்ற ஆர்வத்தில் கம்பெனி கமபெனியாக ஏறி இறங்கிய இவர் "" உயிர் "" என்ற படத்துக்கு இசை அமைத்தார். அதைத் தொடர்ந்து சரியான வாய்ப்பு கிடைக்காததால் நடிக்க ஆரம்பித்தார். இன்று முழுநேர நடிகராகி விட்டார் டி.எஸ். ராகவேந்தர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பொழுதுபோக்கு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் பேசுபவர்.

சமீபத்தில் ஒரு கேசட் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர், மேடையில் பேசும் போது என் மகன் ராம்குமார் இந்த விழாவுக்கு வரும்படி சொன்னான். நான் வந்தேன். இல்லாட்டி சோறு போட மாட்டான். இதோ இங்கே இருக்கிறாரே, மகாநதி ஷோபனா இவர் என் பேத்தி மாதிரி இருக்கிறார். இப்போதெல்லாம் என்னோட பெரும்பாலான நேரங்களை பேரப் பிள்ளைகளோடுதான் கழிக்கிறேன் என்றார்.

சிவாஜியின் தற்போதைய லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைல் "கொண்டை.

இயக்குநரை (கணவன்) இயக்கும் இயக்குநர்(மனைவி)

திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் ஒரு தாடிக்காரர். டி.ஆர். என்றும் அஷ்டாவதானி என்றும் அழைக்கப்படும் அவர், தனக்கு அதிர்ஷ்டத்தைத் தேடித் தந்த மனைவியின் பெயர் பொறித்த லாக்கெட்டுடன் கூடிய சங்கிலியை அணிந்து கொண்டுள்ளார். தற்போது சட்டப்பேரவையில் திமுக உறுப்பினராக உள்ளார்.

இது மட்டுமல்ல மேலும் பல சிறப்புக்களுக்குக் காரணமானவர் டி.ராஜேந்தர். ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர் ராஜேந்தரின் மனைவி உஷா. தான் தயாரித்து டி.ராஜேந்தர் நடித்த படங்களுக்கான பணிகளில் ஈடுபட்ட இவர், இப்போது டி.ராஜேந்தர் நடிக்கும் காட்சிகளை இயக்கவும் செய்கிறார். இது தவிர, தமிழ் தெரியாத நடிகர், நடிகைகளுக்கு வசனங்களைச் சொல்லிக் கொடுக்கவும் செய்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X