வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (எம்.ஆர்.எல்.) பெயர் மாற்றம் - இனி சென்னை பெட்ரோலியம் கார்ப்பொரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்.)
சென்னை:
சென்னை மணலியில் இயங்கி வரும் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் (எம்.ஆர்.எல்.) பெயர், சென்னை பெட்ரோலியம் கார்ப்பொரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்.) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆலையின் பொதுக் குழுக் கூட்டத்தில் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. ஆலையின் பங்குதாரர்களும் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்தும், ஆலையின் அளவு மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் எம்.ஆர்.எல். ஆலையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஆலையின் செயலாளர் வி. சீனிவாசன் தெரிவித்தார்.
குரூட் எண்ணெய்யை சுத்திகரிப்புச் செய்து பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் பொருட்களை உற்பத்தி செய்து வரும் எம்.ஆர்.எல். ஆலை தற்போது மின் உற்பத்தித் துறையிலும் நுழைந்துள்ளது. 500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியில் இந்த ஆலை ஈடுபட்டுள்ளது.
1965-ல் நிறுவப்பட்ட எம்.ஆர்.எல். ஆலையின் தற்போதைய ஆண்டு விற்று முதல் வளர்ச்சி ரூ.27 கோடியாக உள்ளது. உற்பத்தியைத் தொடங்கிய முதல் ஆண்டிலேயே இந்த ஆலை ரூ.3,747 கோடி வருவாய் ஈட்டியது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications