தமிழகத்தில் இன்று
கொழும்பு:
யானை இறவை விடுதலைப் புலிகளிடம் இழந்து எட்டு நாட்களே ஆகியுள்ளநிலையில் மற்றொரு முக்கிய ராணுவ முகாமான பலாலி விமானப் படை தளத்தைவிடுதலைப் புலிகளிடம் இலங்கை ராணுவம் இழந்துள்ளது.
யானை இறவுக்கு 15 கிலோமீட்டர் கிழக்கில் உள்ள பலாலி விமானப் படை தளத்தை,ஞாயிற்றுக்கிழமை நடத்திய திட்டமிட்ட தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகள்கைப்பற்றியுள்ளனர். பலாலி தளம் மட்டுமல்லாது, அதைச் சுற்றியுள்ளகிராமங்களையும் விடுதலைப் புலிகள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.
இந்த மோதலில் 14 ராணுவ வீரர்கள் இறந்தனர். 236 பேர் காயமடைந்தனர்.இறந்தவர்களில் ஒருவர் அதிகாரி. காயமடைந்தவர்களில் 14 பேர் அதிகாரிகள்.
12 மணி நேரம் நீடித்த தாக்குதலின் இறுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணியளவில் ராணுவம் முகாமிலிருந்து தப்பி ஓடியது. கனரக துப்பாக்கிகள், பீரங்கிகள்மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
விடுதலைப் புலிகள் தரப்பில் பெரும் படைப் பிரிவு இதில் ஈடுபடுத்தப்பட்டது.அவர்கள் தாக்குதலுக்கு முன் ராணுவத்தினரால் நிற்க முடியவில்லை. பெரிய முகாமைச்சுற்றிலும் உள்ள சிறிய முகாம்களையும் விடுதலைப் புலிகள் அழித்துத்தரைமட்டமாக்கினர்.
பலாலி முகாமிலிருந்து தப்பிய ராணுவ வீரர்கள் கிலாலி வழியாக தப்பினர். தப்பியராணுவத்தினர் ஏராளமான ஆயுதங்களையும் விட்டுச் சென்றனர். அவற்றையும்விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.
பலாலியைக் கைப்பற்றியுள்ளதன் மூலம் விரைவில் யாழ்ப்பாணத்தையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றுவர் என்று தெரிகிறது.
தொடரும் வெற்றி:
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி யானை இறவு முகாமை, விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.தற்போது பலாலியை எட்டே நாட்களில் பிடித்துள்ளனர். குறைந்த அளவிலானபடைகளைக் கொண்டு விடுதலைப் புலிகள் இந்த வெற்றியை சாதித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications