தமிழகத்தில் இன்று
சேடப்பட்டி முத்தையா திமுகவில் சேர வீரப்பன் அழைப்பு
திருச்சி:
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேடப்பட்டி முத்தையா, கருப்பசாமி பாண்டியன், ரகுபதி ஆகிய மூவரும் திமுகவில் சேர்ந்து அதிமுகவை தோற்கடிக்க உழைக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர்.கழக தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.
திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட இந்த மூவரும், அதிமுகவை, ஜெயலலிதாவிடமிருந்து மீட்கப் போவதாக அறிவித்துள்ளனர். அது நடக்காத காரியம்.இந்தியாவில், ஒரு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட யாரும், அக்கட்சியை மீட்டதாக வரலாறு இல்லை.
சேடப்பட்ட முத்தையா, கருப்பசாமி பாண்டியன், ரகுபதி ஆகிய மூவரும் திமுகவில் இணைந்து கருணாநிதி கரத்தை வலுப்படுத்த வேண்டும். திமுகவில் இருந்துகொண்டு, அதிமுகவையும், ஜெயலலிதாவையும் தோற்டிக்க வேண்டும்.
எம்.ஜி.ஆரின் பெயர், கட்சி, சின்னத்தை ஜெயலலிதா தவறாகப் பயன்படுத்தி வருகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ம.க தலைவர் ராமதாஸும், தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் சண்டைபோடுவதை நிறுத்தி விட்டு ஒன்று சேர வேண்டும். இல்லாவிட்டால் தமிழக நலன்தான் பாதிக்கப்படும் என்றார் அவர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications