கிரிக்கெட் பெட்டிங்: : சிபிஐ விசாரணை துவங்கியது
டெல்லி:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதான மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகள் குறித்து தனது ஆரம்பகட்ட விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ)தொடங்கியது.
லஞ்சம் வாங்கியது, மேட்ச் ஃபிக்ஸிங் ஈடுபட்டது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள்கூறப்பட்டன. மிகவும் பரபரப்பு ஏற்படுத்திய இக் குற்றச்சாட்டுகளை முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் கூறியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டுகள் குறித்து நீதிபதி சந்திரசூட் விசாரணை நடத்தினார். நீதிபதியின் விசாரணை அறிக்கை சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில்சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இந்திய வீரர்கள் ஊழல் புரிந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று நீதிபதி கூறியிருந்தார்.
ஆனால், மனோஜ் பிரபாகர் தான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்று கூறினார். இதையடுத்து, உண்மையை வெளிக் கொணரும் பொருட்டுகுற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, மத்திய புலனாய்வுப் பிரிவுப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்களது முதல்கட்ட விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குரோனியே மீது தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதையும், சிபிஐ போலீஸார் கண்காணிப்பாளர்கள் என்று கருதப்படுகிறது.
இது தவிர, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ள ஆவணங்களையும் சிபிஐ போலீஸார் ஆராய்வார்கள். மேலும், விசாரணைக்குத்தேவைப்பட்டால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை நடத்துவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications