தமிழகத்தில் இன்று
மேற்கு திரிபுராவில் இனக் கலவரம்: 4 பேர் சாவு - ராணுவம் குவிப்பு - ஊரடங்குஉத்தரவு நீட்டிப்பு
அகர்தலா:
மேற்கு திரிபுராவில் இனக் கலவரத்தால் 4 பேர் திங்கள்கிழமை கொல்லப்பட்டதை அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு சட்டம்-ஒழுங்கைநிலைநாட்ட ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திரிபுரா முழுவதும் ராணுவத்தினரும், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரும் ரோந்து சுற்றி வருகின்றனர். நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவுநீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு திரிபுராவில் தற்போது அமைதி நிலவுவதாகவும், மோதல் ஏதும் நடைபெறவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இனக் கலவரத்துக்குக் காரணமானவர்களைப் பிடிக்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உயர்போலீஸ் அதிகாரிகளும், மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரிகளும் முகாமிட்டு நிலைமை ஆராய்ந்து வருகின்றனர்.
மேற்கு திரிபுராவில் ராதாநகர் பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பழங்குடியினரல்லாத இருவரை தேசிய திரிபுரா விடுதலைப் படையைச் சேர்ந்தகொரில்லாக்கள் சுட்டுக் கொன்றனர். இதற்குப் பதிலடியாக, பழங்குடியினரைச் சேர்ந்த 7 பேரை ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கியது.
பலத்த காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவர் இறந்தனர்.
இதற்கிடையே, மேற்கு திரிபுராவில் ஏற்பட்ட இனக் கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்துஅதிகாரிகளுடன் முதல்வர் மாணிக் சர்கார் ஆலோசனை நடத்தினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications