கிரிக்கெட் பெட்டிங்: : சிபிஐ விசாரணை துவங்கியது
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (ஃபெப்சி) பெயரை எந்த கொம்பனாலும் மாற்றமுடியாது என்று "ஃபெப்சி தலைவர் மற்றும் திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் கூறினார்.
"பெப்சியின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தமிழ்த் திரைப்படஇயக்குநர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், "பெப்சி அமைப்பினர் அதன் பெயரை மாற்றமுடியாது என்கின்றனர்.
இதனால் இரு அமைப்புகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பெப்சிஅமைப்பின் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இந்த அமைப்பின் கீழ் உள்ள 23 சங்கங்களின்உறுப்பினர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், அவர்களை ஆதரிக்கும் நடிகர், நடிகைகளும்புறக்கணித்தனர். இந்நிகழ்ச்சியில் "பெப்சி தலைவர் கே.பாலசந்தர் பேசியதாவது:
மே தின விழாவை நட்சத்திர விழாவாக நடத்தியிருக்க வேண்டும். ஆனால், பெப்சி பெயர் மாற்றப் பிரச்னையைதிடீரென்று அவர்கள் ஏற்படுத்தி விட்டதால், அதற்கு தடை ஏற்பட்டுள்ளது. நட்சத்திர கலை விழா மூலம் ஒருகோடியே 20 லட்சம் ரூபாய் நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது நட்சத்திர விழா ரத்தானதால் நிதிதிரட்ட முடியாமல் போய் விட்டது.
பெப்சி தலைவர் என்ற முறையில் இதன் பெயர் மாற்றத்தை உடனடியாக செய்ய முடியாது. நட்சத்திர கலை விழாமுடிந்ததும் செய்து கொள்ளலாம்; கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று மன்றாடிக் கேட்டேன். ஆனால்,இயக்குநர்கள் கேட்கவில்லை. இதனால் ஃபெப்சிக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு என்று கூறுவதை விட, ஃபெப்சிபெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த ரூபாயை இழந்துள்ளோம் என்று தான் கூறுவேன்.
இந்தளவிற்கு பிரச்னை வந்த பிறகு இனியும் நாங்கள் மவுனம் சாதித்துக் கொண்டிருக்க முடியாது. பெப்சியின்பெயரை எந்த கொம்பனாலும் மாற்ற டியாது. இனி மாற்றச் சொல்லவும் முடியாது.
பெப்சி தலைவர் பதவியை நான் எக்காரணம் கொண்டும் ராஜினாமா செய்ய மாட்டேன். தொழிலாளர்களுக்காகஉழைக்க முடிவு செய்து விட்டேன். யாரும் தடை போட முடியாது. என் மீது எந்த நடவடிக்கை வேண்டுமானாலும்எடுக்கலாம். அதற்கு நான் பயந்தவனில்லை என்றார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications