தமிழகத்தில் இன்று
தேயிலை மீதான விற்பனை வரியை குறைக்க தமிழக அரசுமுடிவு
சென்னை:
தேயிலை விலை வீழ்ச்சியின் காரணமாக அதன் மீது விதிக்கப்படும் 8 சதவீத விற்பனைவரியை 4 சதவீதமாக குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த சலுகை 6மாதத்திற்கு தான் அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சட்டசபையில், தமிழகத்தில் தேயிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது பற்றியும்,அதனால் தேயிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும், திமுக, த.மா.காஉறுப்பினர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ தேயிலை 15 ரூபாய், 16 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.இப்போது 5 ரூபாய், 6 ரூபாய் அளவுக்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்குகாரணம் வெளிநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதிஅளித்ததுதான். எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும்.
தேங்கிக் கிடக்கும் தேயிலையை பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன்கடைகளில் விற்பனை செய்ய அரசு முன் வரவேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி கூறியதாவது:
நீலகிரி தேயிலைக்கு ரஷ்யாவில் நல்ல கிராக்கி முன்பு இருந்தது. அதனால் நிறையஅளவு ஏற்றுமதி செய்ய முடிந்தது. இப்போது கென்யா நாட்டில் இருந்து மலிவுவிலையில் தேயிலையை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்து விடுகின்றனர். இதன்காரணமாக நீலகிரி தேயிலையை வாங்குவதில்லை. மேலும் தேயிலை உற்பத்திசாகுபடியும் பெருகிவிட்டது. இதுதான் விலை வீழ்ச்சிக்கு காரணம்.
தேயிலை ஏற்றுமதிக்கு கிலோவுக்கு 2 ரூபாய் சுங்க வரி விதித்து மத்திய பட்ஜெட்டில்அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுங்க வரியை நீக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்,நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா ஆகியோருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
மேலும் இங்கிருந்து ஒரு குழுனர் டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர், மத்தியவர்த்தக அமைச்சர் மாறன் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
ராணுவத்திற்காக 3000 டன் தேயிலை வாங்க வேண்டும் என்று மத்திய ராணுவஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன்.
இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு தேயிலைமீது தமிழக அரசு விதிக்கும் 8 சதவீத விற்பனை வரியை, 6 மாதங்களுக்கு மட்டும் 4சதவீதமாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications