தமிழகத்தில் இன்று
விபத்தில் காயமடைந்த அமைச்சர் தமிழ்குடிமகனுக்கு ஆபரேஷன்
சென்னை:
சென்னையில் சாலை விபத்தில் காயமடைந்த கலை, பண்பாடு மற்றும் தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகனுக்கு திங்கள்கிழமை காலை ஆபரேஷன் நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை மாலை கட்சிப் பிரமுகர் ஒருவரின் வீட்டுத் திருமணத்திற்காக சென்னையில் உள்ள நீலாங்கரைபகுதிக்கு அமைச்சர் தமிழ்குடிமகன் தனது காரில் சென்றார். கார் திருவான்மியூரை அடுத்துள்ள பஜார் பகுதியை அடைந்தபோது எதிரே வந்த இன்னொரு கார் இவர் கார் மீது மோதியது.
இவ்விபத்தில் அமைச்சர் தமிழ்குடிமகன் படுகாயமடைந்தார். அவரது தலை, கை, மற்றும் முகவாயில் அடிபட்டது. அவரதுகார் டிரைவர் ஜெயபாலும் இவ்விபத்தில் காயமடைந்தார். அங்கே முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்குடிமகன்அடையாறில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு திங்கள்கிழமை காலை ஆபரேஷன் நடந்தது.
முதல்வர் வருத்தம்:
அமைச்சர் தமிழ்குடிமகன் விபத்துக்குள்ளானது குறித்து முதல்வர் கருணாநிதிக்குத் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்துகேள்விப்பட்டதும் முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications