மேட்ச் ஃபிக்ஸிங்: புகார் நிரூபனமானால் வாழ்நாள் தடை - சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் முடிவு

Subscribe to Oneindia Tamil

மீண்டும் வாய்ப்பு தந்தால் நல்லாட்சி தருவேன்: பெனாசிர் புட்டோ

வாஷிங்டன்:

மீண்டும் ஒரு முறை ஆட்சி புரிய வாய்ப்பு கொடுத்தால் பாகிஸ்தானை தலை சிறந்த நாடாக மாற்றுவேன் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும்,முன்னாள் பிரதமருமான பெனாசிர் புட்டோ கூறியுள்ளார்.

வாஷிங்டனைச் சேர்ந்த பாகிஸ்தான் பத்திரிகையொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதுகுறித்துக் கூறியுள்ளதாவது:

கடந்த காலங்களில் நான் ஆட்சி செய்தபோது செய்த தவறுகளை உணர்ந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். நான் மட்டுமல்லாது, எனதுஆட்சிக்காலத்தில் இருந்த பலரும் தங்களது தவறுகளை உணர்ந்திருப்பார்கள்.

எனது பொறுப்பை உணர்ந்துள்ளேன். பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால், சிறந்த தலைவராக நான் இருப்பேன்.

பாகிஸ்தான் ராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவு (ஐ.எஸ்.ஐ.) ஆகியவற்றில் உள்ள சில சக்திகள் பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசுக்குஎதிராக செயல்பட்டன. எனது கொள்கைகள் பிடிக்காமல், நான் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம், என்னைக் கவிழ்க்க அவர்கள் முயன்றனர்.

பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்படும் குளறுபடிகளுக்கு, ஐ.எஸ்.ஐ.யை மட்டும் குறை சொல்ல முடியாது. அரசியல்வாதிகளும் இதற்குப்பொறுப்பேற்க வேண்டும்.

உலக அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. ஜனநாயக முறைகளை ஏற்றுக் கொள்ள பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்தால், உலக நாடுகளின்ஆதரவை பாகிஸ்தான் இழக்க நேரிடும் என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+