தமிழகத்தில் இன்று
காஷ்மீரில் பாகிஸ்தான் ராக்கெட் தாக்குதல் - 4 பள்ளிக் குழந்தைகள் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் யூரி பகுதியில் பாகிஸ்தான் துருப்புக்கள் புதன்கிழமைநடத்திய ராக்கெட் தாக்குதலில் பள்ளிக் குழந்தைகள் 4 பேர் உள்பட 5 பேர்கொல்லப்பட்டனர்.
இந்தியத் துருப்புக்கள் மீது பாகிஸ்தானியர்கள் செலுத்திய ராக்கெட், சோடாலி என்றஇடத்தில் இருந்த அரசு நடுநிலைப் பள்ளியின் மீது விழுந்து வெடித்தது. இதில், சம்பவஇடத்திலேயே 4 மாணவர்கள் உள்பட 5 பேர் இறந்தனர்.
பாகிஸ்தான் துருப்புக்கள் தற்போது மக்கள் வசிக்கும் இடங்கள் மீதும், இந்தியபாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.
பாகிஸ்தான் துருப்புக்களின் ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவவீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட சேதம்குறித்து தகவல் ஏதும் இல்லை.
கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் நடத்தி வரும் இத்தகைய ராக்கெட் தாக்குதலில் 4 பேர்இறந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் மற்றும் கடைகள்சேதமடைந்தன.
துப்பாக்கிச் சண்டை - 8 பேர் சாவு:
இதற்கிடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும்தீவிரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை நடந்த சண்டையில் எல்லைப்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உதவி கமாண்டன்ட், 4 தீவிரவாதிகள் உள்பட 8 பேர்இறந்தனர்.
புல்வாமா என்ற இடத்தில் ஒரு வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகளைக் கைது செய்யும்நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீதுதீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும்சுட்டனர்.
இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இச் சண்டையின்முடிவில் 8 பேர் பலியானார்கள். தீவிரவாதிகள் மறைந்திருந்த வீட்டிலிருந்துஏராளமான வெடிபொருட்களும், துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications