மேட்ச் ஃபிக்ஸிங்: புகார் நிரூபனமானால் வாழ்நாள் தடை - சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் முடிவு
திரைப்பட கலைஞர்களுக்கு சிவாஜிகணேசன் பெயரில் "கலை வித்தகர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டசபையில் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் செவ்வாய் கிழமை நடைபெற்றது. அதில் உறுப்பினர்கள் பேச்சுக்கு, இத்துறைஅமைச்சர் முல்லைவேந்தன் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஆங்கிலத்தில் திரைப்படமாக்கப்பட்ட "அம்பேத்கர் சினிமாவை தமிழாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
திரையுலக வரலாற்றில் புகழ் பெற்ற அண்ணா, கலைவாணர், ராஜா சாண் டா, எம்ஜிஆர், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் பெயரில் கலைத் துறைவித்தகர்களுக்கான விருதுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஐந்து விருதுகளுடன் சிவாஜிகணேசன் பெயரில் 99ம் ஆண்டு முதல் "கலை வித்தகர் விருது வழங்கப்படும்.
முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ம் தேதியை தியாகிகள் தினமாக கடைபிடிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதுஎன்றார்.












Click it and Unblock the Notifications