For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்

By Staff
Google Oneindia Tamil News

ஆந்திராவில் 80 வயது முதியவருக்கும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை

டெல்லி:ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கை காட்டுவதற்காக 80 வயதைத் தாண்டிய முதியவர்களுக்கும் கூட குடும்பக் கட்டுப்பாட்டுஅறுவைச் சிகிச்சை நடத்தப்படுகிறது.

ஆந்திர பத்திரிகைகளில் சமீபத்தில் இந்தியாவிலேயே அதிக அளவில் குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை நடத்தப்படுவதாக விளம்பரங்கள் தரப்பட்டன.ஆனால் இதன் பின்னணியில் அதிர்ச்சிகரமான தகவல்கள் உள்ளன.

கடப்பா மாவட்டத்தில் அறுவைச் சிகிச்சைக்கு ஆட்கள் கிடைக்காத காரணத்தால் முதியவர்கள் கூட ஆசை வார்த்தைகள்ை கூறி அறுவைச் சிகிச்சைக்குஉட்படுத்தப்படுகிறார்கள். ரூ. 1000 பணம், இலவச வீட்டு மனை, ரேஷன் கார்டு ஆகியவை தருவதாக இவர்களுக்குக் கூறப்படுகிறது.

80 வயதான மர்பூரி சன்னையாவுக்கு சமீபத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் கூறுகையில், எனது மகன்என்னைக் காப்பாற்றுவதில்லை. வயோதிகம் காரணமாக வேலையும் கிடைக்காது. எனவேதான் இதற்கு ஒத்துக் கொண்டேன் என்றார்.

நாகி ஷெட்டி (65) என்பவர் கூறுகையில், பணம், வீடு கிடைத்ததால் இதற்கு ஒப்புக் கொண்டேன் என்றார்.

அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிலரிடம் அதிகாரிகள் ஒழுங்காக பணம் கொடுக்கப்பதில்லை என்றும் புகார் கூறப்பட்டது.

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் பலரின் கணவர்களுக்கும் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவிலேயே கடப்பா மாவட்டத்தில்தான் குறைந்த அளவு குழந்தைப் பிறப்பு விகிதம் உள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X