மேட்ச் ஃபிக்ஸிங்: போலீஸ் காவலை எதிர்த்து ராஜேஷ் கல்ரா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
புது தில்லி:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குரோனியேவுடன் மேட்ச்ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட ராஜேஷ் கல்ரா, போலீஸ் காவலைஎதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடிசெய்தது.
கடந்த மாதம் கைது செய்யப்பட்ட கல்ரா, தற்போது நீதிமன்றக் காவலில் திஹார்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணை நடத்த விரும்பியஅமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கல்ராவை தங்கள் காவலுக்கு அனுப்பும்படிநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மேட்ச் ஃபிக்ஸிங் வழக்கில் ராஜேஷ் கல்ரா முக்கிய சாட்சியாகும். அவரிடம்விசாரணை நடத்தவேண்டும். அவரிடம் விசாரிக்காவிட்டால் முக்கிய தகவல்கள்கிடைக்காமல் போய்விடும். ஆகவே, அவரை அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்குசுமார் 8 மணி நேரத்துக்கு அனுப்பவேண்டும் என்று மனுவில் அமலாக்கப்பிரிவுஅதிகாரிகள் கோரியிருந்தனர்.
இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் உஷா மெஹ்ரா, மதன்லோகுர் ஆகியோர் விசாரித்தனர். கல்ராவிடம் திஹார் சிறையிலேயே விசாரிக்கலாமேஎன்று நீதிபதிகள் கூறினர். ஆனால், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சார்பில் ஆஜரானகூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஜெய்சிங்கானி, அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில்விசாரணை நடத்தினால்தான் அது முழுமையாக இருக்கும். அப்போதுதான்விசாரணைத் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றார்.
கல்ராவின் வீட்டிலிருந்து டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், பல பேருடையபெயர்களும் விலாசங்களும், தொலைபேசி எண்களும் உள்ளன. அவை எல்லாம்கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடையதாக இருக்கலாம் என்றும், கிரிக்கெட் சூதாட்டத்தில்அதிக அளவில் அன்னியச் செலாவணி மோசடி நடந்திருக்கலாம் என்றும்சந்தேகிக்கிறோம். ஆகவே, அவரை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் விசாரிக்கஅனுமதிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆனால், வீட்டிலிருந்து அமலாக்கப்பிரிவு எடுத்தது என்னுடைய சொந்த டைரியாகும்என்று கூறிய கல்ரா, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தன்னை மனரீதியாககொடுமைப்படுத்துவதாகப் புகார் கூறினார். மேலும், அவர்களது காவலுக்குச் செல்லமறுப்புத் தெரிவித்தார். இது தொடர்பாக அவரது சார்பில் ஒரு மனுவும் தாக்கல்செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கல்ராவின் மனுவைத் தள்ளுபடிசெய்து, மற்றொரு தேதிக்கு இவ் வழக்கை ஒத்திவைத்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications