முகத்தில் தெளித்த சாரல்...
சென்னை:
நடிகர் மன்சூர் அலிகான் அதிமுகவில் இணைந்தார்.
தமிழ் திரைப்படங்களில் வில்லனாக அறிகமாகி, பின்னர் கதாநாயகனாக சில படங்களில் நடித்துள்ள மன்சூர் அலிகானுக்கு அரசியல் ஆர்வம் அதிகம். ஏதாவதுபரபரப்பை ஏற்படுத்தி தனது அரசியல் ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருபவர்.
ஆரம்பத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமகவில் இணைந்தார். அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் போல் செயல்பட்டார். பாமகதனித்து போட்டியிட்டபோது தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.
பின்னர் ராமதாசுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அக்கட்சியை விட்டு விலகினார். தன்னுடைய ஆதரவாளர்கள், ரசிகர்களை கொண்டு அவ்வப்போதுஏதாவது போராட்டம், மறியல் என்று பரபரப்பை ஏற்படுத்தினார். கவர்னர் மாளிகை முன்பு மறியல் என்று அறிவித்து விட்டு, பத்து பதினைந்து நிருபர்களுடன்வேனில் திடீரென்று வந்திறங்கியபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதற்கு பின்னர் அமைதி காத்து வந்த அலிகான் இப்போது அதிகவில் சேர்ந்துள்ளார். திமுக விட்டு விலகி சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நடிகர்ராதாரவியின் அழைப்பின் பேரில் அவர் அதிகவில் இணைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications