9 பேர் பலியான அதே நாளில்தான் இதுவும் நடந்து இருக்கு.. திரிஷா பதிவுக்கு திமுக ஐடிவிங் போட்ட ரீப்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டு அங்கு பணியாற்றிய தொழிலாளர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நாளில், அங்கு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை எனவும் அதே நாளில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது என்று முதல்வர் விஜய்யுடன் திரிஷா பிறந்த நாள் கேக் வெட்டிய காட்சிகளை பகிர்ந்த எக்ஸ் பதிவுக்கு திமுக ஐடி விங் ரீப்ளை செய்து, விமர்சனம் செய்துள்ளது.

தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் நேற்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் விஜய்க்கு, நடிகை திரிஷா வாழ்த்து சொல்லவில்லை என்று சமூக வலைதளத்தில் விவாதங்கள் எழுந்தன.

DMK IT Wing Criticises Vijay Says He Was Celebrating With Trisha While Nine Died in Tiruvallur Gas Leak

திரிஷா இன்ஸ்டா பதிவு

இதற்கிடையில் விஜய்யை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திரிஷா 'அன்பாலோ' செய்து விட்டதாகவும் நேற்று செய்திகள் வெளியானது. கடந்த ஆண்டு முதல் நபராக பிறந்த நாள் வாழ்த்து சொன்ன திரிஷா இந்த முறை ஏன் வாழ்த்து சொல்லவில்லை? இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விட்டதா? என்றெல்லாம் கூட ரசிகர்கள் வலைத்தளங்களில் விவாதித்தனர். ஆனால் இந்த விவாதங்களுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டார்.

விஜய்யின் பிறந்தநாளையொட்டி, அவருடன் 'கேக்' வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் 'எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாய் ஆக்கிய நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் நள்ளிரவு 12 மணிக்கு முதல் ஆளாக விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததை குறிப்பிடும் வகையில் 00:00 என்பதையும் திரிஷா பதிவிட்டு இருந்தார். இதற்கிடையே, திரிஷா வெளியிட்டு இருக்க கூடிய இந்த பதிவுக்கு எதிர்மறை விமர்சனங்களும் எழுந்துள்ளன.

திமுக ஐடி விங் விமர்சனம்!

குறிப்பாக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சட்டமன்றத்திற்கு எடுத்து வரப்பட்ட கேக்கை வெட்ட வேண்டாம் என்று விஜய் திருப்பி அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு காரணம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா கேஸ் கசிவு ஏற்பட்டு 9 பேர் பலியானதும், 60 க்கும் மேற்பட்டவர்கள் உடல் நல பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக விஜய் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்ததாக கூறப்பட்டது.

துயரமான நேரத்தில் தலைமை செயலகத்தில் கேக் வெட்டுவது சரியாக இருக்காது என்று முதல்வர் அதை தவிர்த்து இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அதே நாளில் திரிஷாவுடன் கேக் வெட்டி முதல்வர் விஜய் பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறாரே என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில், திமுக ஐடி விங் எக்ஸ் தளத்திலும் இந்த விவகாரம் குறித்து பதிவிடப்பட்டு இருக்கிறது.

திருப்பாச்சி பட காட்சியை போட்டு விமர்சனம்

திருப்பாச்சி படத்தில் உள்ள ஒரு காட்சியில் திரிஷா சாமி ஆடிக்கொண்டு வாடா.. போடா என்று அழைத்து தனது கட்டுக்குள் வைப்பது போல ஒரு காட்சி இடம் பெற்று இருக்கும். இந்தக் காட்சியை பகிர்ந்துள்ள திமுக ஐடிவிங், இதே நாளில் அமோனியா வாயு கசிவால் 9 பேர் உயிரிழந்ததுடன், 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் அவர் அங்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை. இதனால், அவருக்காக தெரிவிக்கப்படும் அனைத்து "பிறந்தநாள் வாழ்த்துகளும்" அர்த்தமற்றதாகவே தோன்றுகின்றன"என்று பதிவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+