கேக்குல கோக்குமாக்கு! திருப்பி அனுப்புனாரே விஜய்! திரிஷா கூட வெட்டியதாலா? கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: நேற்று முதல்வரின் பிறந்தநாளுக்காக தலைமைச் செயலகத்துக்கு சிறப்பு கேக் வரவைக்கப்பட்டு இருந்தது. ஆனால், திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்தினால் முதல்வர் தரப்பு கேக் வெட்ட வேண்டாம் என சொல்லி கேக்கை திருப்பி அனுப்பிவிட்டதாக தவெகவினர் சொன்னார்கள். ஆனால், நள்ளிரவில் திரிஷாவுடன் கேக் வெட்டிய புகைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், இரவில் கேக் வெட்டியதால் தான் பகலில் விஜய் கேக் வெட்டவில்லையா? என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.
தமிழகம் முழுவதும் முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் உற்சாகமாக கொண்டாடினர். பல்வேறு மாவட்டங்களில் அன்னதானம், ரத்ததான முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சென்னை தலைமைச் செயலகத்திலும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் வகையில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக பெரிய கேக் ஒன்று தயாரிக்கப்பட்டு கோட்டைக்கு கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதற்குள் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதுடன், உயிரிழப்புகளும் பதிவானது. பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசு முழு கவனத்தையும் மீட்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் செலுத்தத் தொடங்கியது.
இந்த சூழலில், "மக்கள் உயிரிழந்துள்ள நேரத்தில் கொண்டாட்டங்கள் தேவையில்லை" என்று முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனால் தலைமைச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேக் வெட்டும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கொண்டு வரப்பட்ட கேக் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் வேறு ஒரு விவாதமும் சூடுபிடித்துள்ளது. விஜய்யின் பிறந்தநாள் நள்ளிரவில் நடிகை திரிஷாவுடன் கேக் வெட்டியதாக கூறப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இதை சுட்டிக்காட்டி சில நெட்டிசன்கள், "நள்ளிரவில் கேக் வெட்டியது சரி, பகலில் மட்டும் ஏன் கேக் வெட்டவில்லை?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மற்றொரு தரப்பினர், தனிப்பட்ட முறையில் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் கொண்டாடப்படும் நிகழ்வுகளுக்கும், அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கும் வித்தியாசம் இருப்பதாக வாதிடுகின்றனர். மக்கள் துயரத்தில் இருக்கும் சூழலில் அரசின் சார்பில் நடைபெறும் கொண்டாட்டங்களை தவிர்ப்பது தான் சரியான நடவடிக்கை தான் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications