முகத்தில் தெளித்த சாரல்...
புது தில்லி:
இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது என திராவிடமுன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது. இத் தகவலை, மத்திய அமைச்சரும் திமுகபிரமுகருமான முரசொலி மாறன் தெரிவித்தார்.
புது தில்லியில் தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கும், பிரதமர் வாஜ்பாயிக்கும்இடையே நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு முரசொலி மாறனும், வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குதிமுகவின் ஆதரவு எப்போதும் உண்டு. மத்தியில் ஆட்சி அமைத்துள்ள தேசியஜனநாயகக் கூட்டணியில் திமுகவும் ஒரு அங்கம் என்பதால், மத்திய அரசுடன்இணைந்து திமுக செயல்படும் என்றார் முரசொலி மாறன்.
இலங்கைக்கு உதவ இந்தியா மறுத்துவிட்ட நிலையில், இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான்நாடுகளின் உதவியை இலங்கை கோரியுள்ளது. இந் நிலையில், பிரதமர்-கருணாநிதிசந்திப்பும், முரசொலி மாறனின் இத்தகைய அறிவிப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக திமுகவுடன் கலந்தாலோசிக்காமல்மத்திய அரசு தனது முடிவை வெளியிட்டதற்கு திமுக கடும் விமர்சனம் செய்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.
பிரதமருக்கும், கருணாநிதிக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தைநடைபெற்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட இந்தியாவின் உதவி தேவைஎன்று இலங்கை அரசு விடுத்த கோரிக்கை குறித்து இரு தலைவர்களும்கலந்தாலோசித்தனர்.
இலங்கைக்கு எந்தவிதமான உதவியையும் அளிப்பதில்லை என்று இரு தலைவர்களும்திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர் என்றார் சிங்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications