தமிழகத்தில் இன்று
டெல்லி:
சில நவீன கருவிகளை பயன்படுத்தி தொலைபேசித்துறைக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். டெல்லியை மையமாக வைத்து இந்த மோசடி நடந்து வந்துள்ளது.
இந்த மோசடி மூலம் கடந்த சில மாதங்களில் மட்டும் தொலைபேசித்துறைக்கு 5 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும்எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மோசடிப் பேர்வழிகளான சஞ்சய் மாள்வியா, தீபக் குப்தா, அரின்டம் கங்கூலிஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தெற்கு டெல்லியில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் 4 தொலைபேசி ஏஜென்சிகள்நடத்தி வருகின்றனர்.
இவர்கள் லீஸ்ட் லைன் எதையும் தொலைபேசித்துறையிடமிருந்து வாங்கவில்லை. வி-சாட் வசதியும் இல்லை. ஆனால்,ஐ.எஸ்.டி.என். டிஜிட்டல் இணைப்பை முறைகோடக பயன்படுத்தி தங்களுடைய தொலைபேசி ஏஜென்சிகளில் இருந்து செல்லும்அழைப்புகளை தொலைத் தொடர்புத்துறையின் சுவிட்களுக்கு மாற்றிவிட்டுள்ளனர்.
சில நவீன கருவிகளையும் இதற்கு பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இவர்களின் ஏஜென்சிகளில் இருந்து பேசப்படும்வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகள் போல மாற்றி கணக்குக் காட்டியுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் மட்டும் 6.37 லட்சம் வெளிநாட்டு அழைப்புகள் (எஸ்.டி.டி.) இந்த ஏஜென்சிகளில் இருந்துபேசப்பட்டுள்ளன. இவற்றிற்கு ஒரு நிமிடத்துக்கு 0.64 அமெரிக்க டாலர் வரை பொதுமக்களிடம் வசூலித்துள்ளனர்.
ஆனால், இவற்றை தொலைபேசித்துறையிடம் உள்ளூர் அழைப்புகளைப் போல காட்டி 3 நிமிடத்துக்கு ரூ. 1.20 மட்டும்தொலைபேசித்துறைக்குக் கட்டியுள்ளனர்.
இங்கு பேசப்பட்ட 24 அழைப்புகளில் ஒன்றை மட்டும் வி.எஸ்.என்.எல். சேனல் வழியாக அனுமதித்துள்ளனர். மற்ற 23அழைப்புகளையும் வி.எஸ்.என்.எல். சேனலுக்கே செல்லவிடாமல் வேறு மார்க்கத்தில் அனுப்பியுள்ளனர்.இது நாட்டின்பாதுகாப்புக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயல் என்பதால் இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அன்னிய நாட்டு சதி குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications