தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
இலங்கை பிரச்சனை: அகதிகள் விசைப்படகு மூலம் தமிழகம் வருகை

ராமேஸ்வரம்:

இலங்கைப் பிரச்சனையினால் பாதிக்கப்பட்ட அகதிகள் விசைப்படகு மூலம் தமிழகத்தை நோக்கி வந்த வண்ணம்உள்ளனர்.

இதுவரை இலங்கையிலிருந்து தப்பி வந்த 23 அகதிகளை தமிழக போலீசார் மீட்டுள்ளனர்.

இது குறித்து கூறப்படுவதாவது:

இலங்கையில் யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகள் 40 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்களைச் சுற்றி வளைத்துள்ளனர்.அதனால் யானையிறவு, பலாலி, யாழ்ப்பாணம் பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது.

விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கியுள்ள வீரர்களை மீட்க இலங்கை இந்தியாவின் உதவியைக் கேட்கும் இந்தியாஅதற்கு மறுத்துள்ளது.

இந்நிலையில் அங்கே சிக்கித் தவிக்கும் பலர் ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கிருந்து விசைப்படகுமூலம் இவர்கள் தப்பி தமிழகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

விடுதலைப்புலிகள், அகதிகள் என்ற போர்வையில் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்றும் தமிழகப்போலீசாருக்குத் துப்புக் கிடைத்துள்ளது.

அதனால் ராமேஸ்வரத்திற்கு விசைப்படகு மூலம் அவர்கள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில்விடுதலைப்புலிகளும் இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால் இலங்கையிலிருந்துராமேஸ்வரத்திற்குத் தப்பி வரும் அகதிகளை கடும் சோதனை செய்கின்றனர்.

மேலும் கடலில் சிக்கியுள்ள அகதிகளை மீட்கும் முயற்சியிலும் தமிழக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+