தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
திருச்சியில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை

திருச்சி:

திருச்சியில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி பிச்சை முத்துபோலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

திருச்சியில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு போலீசாருக்கு மிகப்பெரிய தலைவலியாகஇருந்து வந்தவர் பிச்சைமுத்து.

கூலிக்குப் பணம் வாங்கிக்கொண்டு யாரை வேண்டுமானாலும் கொல்லக்கூடியவர் இவர். 7 கொலை வழக்கில்சம்பந்தப்பட்ட இவரைப் பிடித்து விட போலீஸ் தனிப்படை தீவிரமாய்த் தேடிவந்தது. ஆனால் எங்கு தேடியும்கிடைக்காமல் இருந்து வந்த இவர் மலைக்கோட்டை அருகே பதுங்கியிருப்பதாகப் போலீசாருக்குத் தகவல்கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று இவரைத் தீவிரமாய்த் தேடினர். போலீசாரைக் கண்டுவிட்ட அவர்அங்கிருந்தே போலீசாரை நோக்கி நாட்டுவெடிகுண்டுகளை வீசித் தாக்கினார்.

உஷாரடைந்த போலீசார் அவனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். சம்பவ இடத்திலேயே பிச்சை முத்து குண்டுபாய்ந்து இறந்தார். இத்துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+