தமிழகத்தில் இன்று
டெல்லி:
தனித் தமிழ் ஈழத்துக்கு ஆதரவு தர முடியாது என டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிகூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் இலங்கையின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் இந்தியா முழு ஆதரவுவழங்கும் எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
புலிகள் ஆதரவு கட்சிகளான சில தமிழக கட்சிகளும் மத்திய அரசின் இந்த நிலையை ஏற்றுக் கொண்டுவிட்டன.
கூட்டத்துக்குப் பின் வெளியே வந்த பிரதமர் வாஜ்பாய் நிருபர்களிடம் கூறுகையில், இலங்கை அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுதான் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அதே நேரத்தில் தமிழ் மொழி பேசும் மக்களின் உரிமைகளும் காக்கப்பட வேண்டும்.இலங்கை பிரச்சனையை நாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகக் கூறுவது தவறு.
தொடர்ந்து அங்கு நிலைமையை கண்காணத்து தான் வருகிறோம். ஆனால், ராணுவரீதியில் தலையிட மாட்டோம் என்பதைதெரிவித்துவிட்டோம். முனபு ராணுவத்தை அனுப்பியதன் மூலம் ஏற்பட்ட அனுபவம் ஒரு சிக்கலான அனுபவம் என்றார்வாஜ்பாய்.
முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய வாஜ்பாய், இலங்கை பிரச்சினையில் எந்தவிதமான அறிக்கைகளும் விட்டுகுழப்ப வேண்டாம் என தேசிய ஜனநாயக முன்னணயில் உள்ள தமிழக கட்சிகளை (திமுக, மதிமுக, பாமகா) கேட்டுக் கொண்டார்.கூட்டத்தில் பேசிய ஒரு தமிழக எம்.பி. இப்போது இலங்கை சென்றுள்ள விமானப் படைத் தலைவர் டிப்னிசை உடனே இந்தியாதிரும்பச் சொல்ல வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் இது முன்பே திட்டமிட்டபயணமாகும், இது இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை, இந்த பயணத்துக்கும்இப்போதைய பிரச்சனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் கேட்டுக் கொண்டால் மட்டுமே எந்த உதவியும் செய்வோம்.இப்போது உள்ள நிலையில் இரு தரப்பினருமே எந்த உதவியும் கேட்சவில்லை. இதனால், மத்தியஸ்தம் செய்யும் பேச்சுக்கேஇடமில்லை. பிரச்சினை தொடர்பாக பல நாடுகளுடனும் பேசிவிட்டேன். எந்த நாடும் இலங்கைய பிரச்சினையில் தலையிடும்எண்ணத்தில் இல்லை. ஆனால், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கச் செய்யநார்வே முயன்று வருகிறது. நாங்கள் நார்வேயுடன் தொடர்பு கொண்டு வருகிறோம் என்றார்.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், இலங்கையில் எந்தமூன்றாவது நாடும் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கேட்டுக் கொண்டன. முக்கியமாகராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவே கூடாது என்று அனைத்து கட்சிகளுமே கேட்டுக் கொண்டன என்றார்.
இலங்கை பிரச்சனை குறித்து தங்களுடன் தமிழக முதல்வர் கருணாநிதி எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளது குறித்து பிரதமரிடம் ஒரு நிருபர் கேட்டார். இதற்கு வாஜ்பாய் பதிலளிக்கையில், இப்பிரச்சனை தொடர்பாக தமிழகத்தின அனைத்துக் கட்சிகளுடனும் சில நாட்களில் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications