தமிழகத்தில் இன்று
சென்னை:
அதிமுக மாணவரணி மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் இம்மாதம் 14ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடைபெறும் என்று அக்கட்சியின்பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கட்சியில் எல்லா அமைப்புகளையும் ஜெயலலிதா மாற்றியமைத்துள்ளார். இளைஞரணி, மாணவரணி, ஜெ. பேரவை என எல்லா துணை அமைப்புகளும்மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மாற்றியமைக்கப்பட்ட இந்த அமைப்புகளை முடுக்கி விடும் வகையில் அதன் கூட்டங்களை நடத்த ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஜெயலலிதா பேரவை கூட்டம் தற்போது மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இப்பேரவையின் புதிய தலைவராக சசிகலா அக்கா மகன்தினகரன் பொறுப்பேற்றுள்ளார்.
அடுத்ததாக மாணவரணிக் கூட்டங்களை நடத்த ஜெயலலிதா திங்கள் கிழமை உத்தரவிட்டார். இந்த அணியின் புதிய பொறுப்பாளராக தங்க தமிழ்ச் செல்வன்நியமிக்கப்பட்டார். அதன் மாநில நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது மாணவரணியின் மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டத்தை மாவட்டந்தோறும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 14ம் தேதி மதுரையில்துவங்கும் இக்கூட்டம், 15ம் தேதி நெல்லையிலும், 16ம் தேதி தூத்துக்குடியிலும் நடைபெறுகிறது. 30ம் தேதி வரை இக்கூட்டம் தொடர்ச்சியாகநடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications