கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்: முக்கிய தடயம் ஏதும் கிடைக்கவில்லை
டெல்லி:
கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் ஊழல் விசாரணையில் இதுவரை முக்கிய தடயம் ஏதும் சிக்கவில்லை எனவும் முக்கியதிருப்பம் ஏதும் ஏற்படவில்லை எனவும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.விசாரணைக் குழுவின் தலைவரும் சிபிஐ இணை இயக்குனருமான சவானி நிருபர்களிடம் கூறுகையில்,விசாரணைக்கு காலக்கெடு ஏதும் இல்லை. மனோஜ் பிரபாகர் டெல்லி திரும்பியவுடனேயே அவரிடம் விசாரணைநடத்தப்படும்.மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டவர்கள் குறித்து தன்னிடம் ஆதாரம் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின்முன்னாள் தலைவர் பிந்த்ரா கூறியுள்ளார். ஆனால், அதற்கான ஆதாரம் எதையும் பிந்த்ரா சிபிஐயிடம் தரவில்லை.இந்திய வீரர்கள், அதிகாரிகளுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருந்ததா என்பது மட்டும் குறித்தே நாங்கள்விசாரித்து வருகிறோம். அப்படி யாருக்காவது தொடர்பிருப்பது தெரியவந்தால், எங்கே இந்தத் திட்டம்தீட்டப்பட்டது, யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பிருந்தது என்பது குறித்தும் சிபிஐ விசாரிக்கும்.மேட்ச் பிங்சிங்குக்கும் மும்பை தாதாக்களுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவது குறித்து எங்களுக்கு எந்தஆதாரமும் கிடைக்கவில்லை. இதில் தாவூத் இப்ராகிம், அவனது தம்பி அனீசுக்கு தொடர்பிருப்பது உறுதியானால்அவர்களை இந்தியா கொண்டுவர சிபிஐ முயற்சிக்கும்.இந்தியாவுக்கு வெளியிலும் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்பிருந்தால் அன்னிய நாட்டுபுலனாய்வு அமைப்புகளின் உதவியையும் கோருவோம்.காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமானமாதவ்ராவ் சிந்தியாவுக்கு 1993ம் ஆண்டில் மேட்ச் பிக்சிங் தொடர்பாக முக்கிய விவரம் ஒன்றுதெரிவிக்கப்பட்டதாக முன்னாள் மத்திய வருவாய்த்துறை செயலாளர் சிவராமன் கூறியுள்ளார். சிந்தியாவுக்குதொலைபேசியில் தான் அந்த செய்தி தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த தொலைபேசி பேச்சு அடங்கிய கேசட்மத்திய வருவாய்த்துறை புலனாய்வுப் பிரிவிடம் உள்ளதாகவும் தெரிகிறது. இந்த கேசட்டை கொடுக்குமாறு சிபிஐகேட்டுக் கொண்டுள்ளது.இவ்வாறு சவானி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications