தமிழகத்தில் இன்று
சென்னை:
மத்திய மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்து 11ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமாகா பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மூப்பனார் கூறினார்.
இதுபற்றி சென்னையில் திங்கள் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
மத்திய அரசு பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள்கைகளும், நிர்வாக முடிவுகளும் பெருமளவில் பொதுமக்களையும்,குறிப்பாக ஏழை எளிய அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்க மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளன.
அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, மண்ண்ெணெய், சமையல் எரிவாயு ஆகியவைகளின் விலைகள் பல மடங்குஉயர்த்தப்பட்டதுடன், விவசாய இடு பொருளான யூரியா விலையும் மிகவும் உயர்ந்துள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை எவ்வித முறையான கொள்கைகளை வகுக்காமல், அதற்கான நிபுணர்கள் அடங்கியஆணையத்தையும் நியமிக்காமல், தன்னிச்சையாக, ரகசியமாக அமைச்சரும், அதிகாரிகளும் மட்டுமே முடிவு செய்து விற்பனைசெய்வதும், சேலம் உருக்காலை போன்றவற்றை விற்க முயற்சிப்பதும் கண்டனத்திற்குரியது.
உள்நாட்டு உற்பத்தியை ஆதரித்துப் பாதுகாக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு உலகவியாபார நிறுவனம் அனுமதித்துள்ள சுங்கவரியை கூட விதிக்காமல், இறக்குமதி செய்வது உள்நாட்டுத் தொழிலை பெருமளவில்நசிக்கச் செய்து விடும்.
நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் கதவடைப்புச் செய்துள்ளன. பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பசியிலும்,பட்டினியிலும் வாடுகின்றனர். அதே நேரத்தில் பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் லாப வேட்டைக்காக தங்களது கடன் வலையைபரக்க விரித்துள்ளனர்.
விவசாயிகளின் உற்பத்திக்கு கட்டுப்படியான விலைகள் கிடைக்க ஏற்பாடு செய்யாத மத்திய அரசு, விவசாய இடுபொருட்களின்விலையை பன்மடங்கு உயர்த்தி, விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கச் செய்து விட்டது. விவசாயத் தொழிலாளர்கள் சடடம்,பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, 14 வயது வரையிலான இலவசக் கல்வி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெகுஜனஅமைப்புகளின் தேசிய மேடை சார்பில் மே 11ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் வெற்றி பெற தமாகாவினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மூப்பனார் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications