தமிழகத்தில் இன்று
திருச்சி:
தமிழ்நாட்டில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருவதாக மூப்பனார் தெரிவித்தார்.
திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கைப் பிரச்சனையில் மதிமுக வும், பாமக யும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவே பேசி வருகின்றன. அவர்கள் தங்களது கட்சியின்கொள்கைகளுக்கேற்ப இவ்வாறு பேசலாம். மத்திய அரசு ராணுவ உதவி அளிக்க மறுத்திருப்பது அவர்களது கொள்கைகளையே காட்டுகிறது.
மேலும் இலங்கை பிரச்சனையில் தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் மூத்த தலைவரானஅவர் டெல்லி செல்லுமுன் எங்களையும் அழைத்து ஆலோசித்திருந்தால் இன்னும் பலமாக இருந்திருக்கும்.
அதிமுக யாருடனும் கூட்டணி இல்லை. தனித்துப் போட்டியிடும் என்று கூறியிருக்கிறார். கருணாநிதி கூட ஒரு முறை இப்படிக் கூறியிருக்கிறார். நாங்கள்தமிழ்நாட்டில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இலங்கைப் பிரச்சனை குறித்து வெவ்வேறு கருத்துக்களைச் சொல்லி வருகிறார்கள். கட்சியின் இறையாண்மையைப்பொறுத்து மத்திய அரசு இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும். இவ்வாறு அவர் கூறினார்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications