தமிழகத்தில் இன்று
நடராஜன் குறித்து ஜெயலலிதா
சென்னை:
"நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதற்கு உதாரணமாகி விட்ட நடராஜன் (சசிகலா கணவர்) சொல்லும் கட்டுக் கதைகளைகட்சியினர் நம்ப வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செவ்வாய்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
என் இல்லத்திலிருந்து பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியே தூக்கி எறியப்பட்ட ஒரு நபர் அவ்வப்போது அதிமுக விஷயத்தில்மூக்கை நீட்டுகிறார். மூக்கை நீட்டும் போதெல்லாம் நான் முழுவதுமாக அறுத்து விடுகிறேன். ஆனாலும், அந்த நபர் பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதற்கு உதாரணமாகி அவ்வப்போது கட்டுக் கதைகளை இட்டுக் கட்டுகிறார். எருமைமாட்டின் மீது பெய்த மழையாக என்ன சொன்னாலும் அந்த நபருக்குச் சொரணை என்பது அறவே இல்லாமல் போய் விட்டது.
எம்ஜிஆரிடம் எனக்காகப் பணிந்து பேசியதாக இந்த நபர் பொய் மூட்டையாகிப் புலம்புகிறார். விட்டால் இவரைக் கேட்டுத் தான்கடல் அலைகளும் கரையோரம் வருகிறது என்று வரம்பின்றி உளறுவார் போலிருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால்எம்ஜிஆரிடம் என்னை அறிகப்படுத்தியதே இவர் தான் என்றும், 1964ல் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்க இவர் தான்காரணம் என்றும் சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது.
"பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு என்று இந்த நபரை இனிமேலும் விட முடியாது. பாடம் புகட்டியேஆக வேண்டும். இந்த பொல்லாத மனிதரின் கேள்விகளுக்கு, சசிகலா பதில் சொல்ல மாட்டார். அவர் பண்பாளர்; குடும்பப் பெண்.
நான் ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைவர். இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லாமல் சும்மா இருக்க முடியாது.கோமாளிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.
இந்த நபர் ஒரு நாளும் எம்ஜிஆரை சந்தித்ததே கிடையாது. அரசு ஊழியராக இருந்ததால் அரசு விழாக்களில் முதல்வராகஎம்ஜிஆரை பார்த்திருக்கலாமே தவிர, தனிப்பட்ட முறையில் தனியாக என்றைக்குமே சந்தித்தது இல்லை.
எம்ஜிஆரை நான் சந்திக்க இயலாத சில தருணங்களில் நான் சொல்லிய செய்திகளை, எம்ஜிஆரிடம் சேர்க்க, சசிகலா தான்சந்திப்பார். எம்ஜிஆர் என்னிடத்தில் தனியாகப் பேசும்போது, "சசிகலா தங்கமான பெண். மிக நல்ல குடும்பப் பெண். ஆனால்,அவரது கணவன் ஆபத்தான மனிதன். அவனிடம் எச்சரிக்கையாக இரு என்று எனக்கு அறிவுரை கூறினார்.
கடந்த 1981ம் ஆண்டு எட்டையபுரத்தில் நடந்த பாரதியார் நூற்றாண்டு விழாவில் எனக்கு அந்த நபர் அறிமுகம் ஆனதாகப்பிதற்றுகிறார். அன்றைக்கு அரசு விழாவில் எத்தனையோ அதிகாரிகள் இருந்தார்கள். அதில் இவரும் ஒரு பி.ஆர்.ஓ.வாக (மக்கள்தொடர்பு அதிகாரி) இருந்திருக்கலாம். அன்றைக்கு இவர் யார் என்றே எனக்குத் தெரியாது. யாரும் அறிமுகம் செய்து வைக்கவும்இல்லை.
உண்மையில் சசிகலா என்னை முதல் முதலாகச் சந்தித்தது 1984ல் அதிக தலைமை அலுவலகத்தில் தான். 1991 தல் 96 வரைபலரை ஏமாற்றிக் காரியம் சாதித்துக் கொள்ள அரசாங்கத்தை அந்த நபர் தானே நடத்துவதாகப் பலரிடம் கூறி மோசடி செய்துவந்தார். இன்றைக்கு நானே சுயமாக முடிவெடுத்துச் செயல்படுவதாக முன்னுக்குப் பின் முரணாக உளறுகிறார்.
எம்ஜிஆர் மறைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இவரைப் பார்த்தாராம்; ஏதேதோ சொன்னாராம். இந்த மனிதர் வாயில்உண்மையே ஒருபோதும் வராது போலிருக்கிறது. தனக்கு கட்சியில் ஒரு பிடிப்பு இருப்பது போல காட்டிக் கொண்டுஅதிமுகவினரை ஏமாற்ற எந்த பொய்யையும் சொல்லத் தயாராகி விட்டார். அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் தருணம்கனிந்து விட்டது. இனிமேலும் அதிகவினரை ஏமாற்ற இந்த நபர் அனுமதிக்கப்படமாட்டார்.
இந்த நபர் நடைப்பயணம் மேற்கொண்ட போது இவரைப் போய் பார்த்ததற்காக பல அதிமுகவினரை கட்சியை விட்டேநீக்கப்பட்ட வரலாற்றை இவர் மறந்து விட்டார் போலும். அவர் இல்ல நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதாக பொய் சொல்கிறார்.அதிமுகவினரை ஏமாற்ற ஏதேதோ சொல்கிறார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications