தமிழகத்தில் இன்று
கருணாநிதிக்கு 15.6 லட்சம்
சென்னை:
திமுக ஆட்சியில் ஆடம்பரச் செலவுகள் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்,ஜெயலலிதா ஆட்சியில் அவரது பயணச் செலவுக்கு மட்டும் செலவிட்ட அரசுப் பணம் மூன்று கோடியே 8 லட்சத்து 94 ஆயிரத்து666 ரூபாய். அதே செலவு திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதிக்காக செலவிடப்பட்டது 15 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் தான்.
இந்த செலவு விவரங்களை சட்டசபையில் செவ்வாய்க்கிழமை சட்ட அமைச்சர் ஆலடி அருணா வெளியிட்டார்.
மாவட்ட நிர்வாகம் பற்றிய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதிலளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
திமுக ஆட்சியில் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நான்காண்டு காலத்தில் 7 முறை மாவட்ட கலெக்டர்கள்மாநாடு நிடத்தப்பட்டுள்ளது. வருகிற 28ம் தேதி கூட மாவட்ட கலெக்டர்கள் மாநாடு சென்னையில் நிடத்தப்படுகிறது.
இதுவே ஜெயலலிதா ஆட்சியில் ஐந்தாண்டுகளில் 3 முறை தான் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. துயர்துடைப்பு நிதி கேட்டு பொது மக்கள் விண்ணப்பித்தாலும், அவை தரப்படுவதில்லை என்று உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.ஒவ்வொன்றுக்கும் அரசு காலக் கெடு நிர்ணயித்துள்ளது. அதற்குள் நிதி வரவில்லை என்றால் புகார் செய்யுங்கள். கண்டிப்பாகநடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற விண்ணப்பங்கள் இந்த ஆட்சியில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 866 பெறப்பட்டன. அதில் 5லட்சத்து 5 ஆயிரம் மனுக்கள் உடனடியாக தீர்க்கப்பட்டு விட்டன.
அந்தளவுக்கு மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தரப்பட்டு வருகிறது. மற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு இதுபோன்றநிதிகளை தட்டுபாடின்றி வழங்கி வருகிறோம்.
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். அதிமுக ஆட்சியில் அவரது பயணச் செலவுக்காக 3 கோடியே 8 லட்சத்து 94 ஆயிரத்து 666ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதுவே முதல்வர் கருணாநிதிக்காக இந்த ஆட்சியில் செலவிடப்பட்டது வெறும் 15 லட்சத்து 69ஆயிரம் ரூபாய் தான்.
அதிலும் இவர் வெறும் பால்கனி அரசு நடத்தவில்லை. பட்டி தொட்டிகளெல்லாம் சுற்றி வந்து அரசு நடத்துபவர் என்றார்.
அமைச்சரின் இந்த கருத்தை அதிமுக உறுப்பினர்கள் ஆட்சேபித்தனர். ஆனால், தாம் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றுஅமைச்சர் விளக்கம் அளித்ததும் அவர்கள் அமைதியாகினர்.
தொடர்ந்து அமைச்சர் பேசும்போது, ""திமுக ஆட்சியில் ஆடம்பரம் அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது. நேர்மை, எளிமை, சிக்கனம்என்ற மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு இந்த ஆட்சி நடைபெறுகிறது. உரிமைக்காக குரல் கொடுப்பதிலும், உறவுக்காககை கொடுப்பதிலும் திமுக என்றைக்கும் முன்னிலையில் இருந்து வருகிறது.
சீனா ஆக்கிரமிப்பு ஏற்பட்டபோது 6 கோடி ரூபாய் நிதி வசூலித்துக் கொடுத்தவர் கருணாநிதி. அதேபோல் கார்கில் போர்வந்தபோது 58 கோடி ரூபாய் நிதி வசூல் செய்து தேசிய பாதுகாப்பு நிதிக்கு கொடுத்தார். திமுக அரசின் தேசியக் கண்ணோட்டம்எந்தளவுக்கு பரந்து விரிந்துள்ளது என்பது இதன்முலம் தெரியும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications