தமிழகத்தில் இன்று
டெல்லி:
ரேசன் பொருள்கள், சமையல் காஸ் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் மீதான மானியத்தை (சப்சிடி)குறைத்துவிட்டதால் அவற்றின் விலை உயர்ந்துவிட்டதாகக் கூறி பார்லிமென்டில் எதிர்க் கட்சிகள் போராட்டம்நடத்தின. இதையடுத்து வியாழக்கிழமை பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்டது.
பார்லிமென்ட் கூடிய உடனேயே எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று இந்தப் பிரச்சினை குறித்து பேசஅனுமதிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால், இதற்கு அனுமதி தர சபாநாயகர் பாலயோகி மறுத்தார்.
இதை எதிர்த்து எதிர்க் கட்சி எம்.பிக்கள் அனைவரும் பேசியதால் சபையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது.அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் பாலயோகி மேற்கொண்ட முயற்சிகளில் பலன் அளிக்கவில்லை. சிலஎம்.பிக்கள் சபையின் மத்தியப் பகுதிக்கே ஓடினர்.
இந் நிலையில் காங்கரஸ் தலைவர் சோனியா காந்தியை பேசுமாறு பாலயோகி அழைத்தார். இதற்கு ஆளும் பாரதீயஜனதா கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அவர்களின் எதிர்ப்பை பாலயோகி நிராகரித்தார்.
இதையடுத்துப் பேசிய சோனியா காந்தி, இந்த பார்லிமென்ட் கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே விலைஉயர்வை வாபஸ் பெறக் கோரினோம். மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பார்த்தோம். ஆனால், அரசு அதை கண்டுகொள்ளவே இல்லை.
விலை உயர்வை எதிர்தது பல கட்சிகளும் பார்லிமென்டின் எதிரே தர்ணா நடத்தி வருகின்றன என்றார்.
அப்போது இடைமறித்த பாலயோகி இந்த விஷயத்தை பின்னர் பேசலாம். இப்போது கேள்வி நேரத்தை நடத்தவிட வேண்டும் என்றார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்ததால் பெரும் கூச்சல் குழப்பம்ஏற்பட்டது. எம்.பிக்களை அமைதிப்படுத்த முடியாததால் பார்லிமென்ட்டை சபாநாயகர் ஒத்தி வைப்பதாகஅறிவித்தார்.
ராஜ்யசபையிலும் இதே விஷயத்தை எதிர்க் கட்சிகள் கிளப்பியதால் அந்த அவையும் ஒத்தி வைக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications