தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையில் யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் நடந்துவருகிறது.
சண்டையில் இதுவரை 33 ராணுவ வீரர்களும் 96 விடுதலைப் புலிகளும் பலியாகியுள்ளனர். அரியாவி,தனன்கிளப்பு பகுதிளில் தான் இரு தரப்பினரும் கடும் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகினறனர்.
நாட்டின் வட பகுதியில் உள்ள ஒரே விமானத் தளமான பலாலி மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திவருவதாக வந்துள்ள செய்திகளை அரசு மறுத்துள்ளது. இந்த விமான நிலையம் மீது இதுவரை புலிகள் தாக்குதல்ஏதும் நடக்கவில்லை என அரசு கூறுகிறது. விமான நிலையம் தொடர்ந்து இயங்கி வருவதாகவும் கூறியுள்ளது.
யாழ்பாணம்-கண்டி தேசிய நெடுஞ்சாலையை கைப்பற்ற புலிகள் தொடரந்து முயற்சித்து வருகினறனர்.வியாழக்கிழமை தொடர்ந்து 12 மணி நேரம் சண்டை நடந்தது. இதில் 96 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டதாகவும் பெரும் எண்ணிக்கையிலான விடுதலைப் புலிகள் காயமடைந்தாகவும் ராணுவம் கூறுகிறது.இதையடுத்து கூடுதல் புலிகளை போர் நடக்கும் பகுதிக்கு அனுப்ப விடுதலைப் புலிகளின் தலைமைஆணையிட்டுளளதாக ராணுவம் தெரிவிக்கிறது. புலிகளின் வயர்லெஸ் பேச்சை இடைமறித்து கேட்டபோது இந்தவிவரம் தெரியவந்ததாக ராணுவ அதிகாரிகள் கூறினர்.
ராணுவத் தரப்பில் 2 அதிகாரிகளும் 31 வீரர்களும் பலியாகியுள்ளர். யாழ்பாணத்தின் நகராட்சி கட்டுப்பாட்டில்உள்ள பகுதிகளை நெருங்கிவிட்டதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். ஆனால், இதையும் அரசு மறுத்துள்ளது.
அரியாலியில் புலிகளின் பதுங்குக் குழிகளை தாக்கி அழித்ததாக விமானப் படை பைலட்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications