செயலை விட அதன் பயனை நேசித்தால்!
லண்டன்:
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுடனான போரின் நிலை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காதிங்கள்கிழமை பேச்சுவார்த்தையைத் துவக்கினார்.
ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் இரண்டு பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அதிபர் சந்திரிகா அழைத்திருந்தார். சந்திரிகாவின் வீட்டில் இக்கூட்டம்நடந்தது. யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலைமை குறித்து கட்சிப்பிரதிநிகளுக்கு விளக்கப்பட்டது.
இக்கூட்டத்தின்போது, மக்கள் வசிக்கும் பகுதிகளில் விடுதலைப் புலிகள் குண்டு வீசுவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பிற எதிர்க்கட்சியினருடன் பேச்சு நடத்த முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்திருந்தது. போர் நிலை குறித்துஅவர்களுடன் பேச ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்திருந்தது.
இதற்கிடையே, யாழ்ப்பாணத்தில் தற்போதைய போர் நிலவரம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. போர் குறித்து உறுதியான தகவல்கள் வராததால்,லேட்டஸ்ட் நிலவரங்கள் தெரியவில்லை.
கொழும்பு நகரைச் சேர்ந்த நிவாரணப் பணிக் குழு அதிகாரிகள் கூறுகையில், யாழ்ப்பாணம் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் இடைவிடாமல்சண்டை நடந்து கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.
முன்று நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் நகர் மீது இறுதித் தாக்குதல் நடத்த புலிகள் தயாராகுவதாக செய்திகள் வந்தன. இதையடுத்து அங்கு ராணுவத்தின்தயார் நிலை அதிகரிக்கப்பட்டது.
ஆளெடுப்பில் புலிகள்:
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் தங்களது படைக்குப் புதிதாக வீரர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதாக இலங்கை ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் யாழ்ப்பாணம் நகருக்கு வெளியே நடந்த சண்டையின்போது விடுதலைப் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதைசரிக்கட்டுவதற்காக புதிதாக ஆள் எடுக்கும் பணியில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகள் தரப்பில் யாழ்ப்பாண போர் குறித்து வேறு ஏதும் தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், விடுதலைப் புலிகள்ஆதரவு இன்டர்நெட்தளத்தில் யாழ்ப்பாணம் நகரிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.சைக்கிள்கள், வேன்கள், கார்களில் அவர்கள் செல்வதாகவும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. பொதுமக்கள் பெரிய அளவில்வெளியேறவில்லை என்றும் சண்டை ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை என்றும் நிவாரணப் பணிக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.


Click it and Unblock the Notifications
