செயலை விட அதன் பயனை நேசித்தால்!
போலாகோவன் (அஸ்ஸாம்):
அஸ்ஸாம் மாநிலத்தில் மதம் பிடித்த நிலையில் கிராமத் தலைவரைக் கொன்றயானையை, அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொன்று, கொடூரமான முறையில்உடலை துண்டித்துள்ளனர்.
போலாகோவன் என்ற இடத்தில் 40 வயதான இந்த யானையின் சிதைந்த நிலையிலானஉடல் கிடந்தது. கொடூரமாக கொல்லப்பட்ட இந்த யானையின் பெயர் லக்கி பகதூர்.ஜுபாம்பாரி தேயிலைத் தோட்டத்தில் யானையின் உடல் கிடந்தது. அழுகிய நிலையில்உடல் இருந்தது. தலை, தந்தங்கள், தும்பிக்கை, கால் ஆகியவைதுண்டிக்கப்பட்டிருந்தன. கால் விரல் நகங்கள் கூட பிய்த்து எடுக்கப்பட்டுள்ளது. உடலேகண்டம் துண்டமாக வெட்டியெடுக்கப்பட்டிருந்தது.
லக்கி பகதூரை வளர்த்து வந்த 75 வயதான சோபுர் அலியும், அவரது எட்டு உறுப்பினர்கொண்ட குடும்பமும் இந்த சம்பவத்தால் இடி விழுந்தது போன்ற அதிர்ச்சியில்மூழ்கியுள்ளனர்.
மதம் பிடித்த நிலையில், சமீபத்தில் ஜுபாம்பாரி கிராமத் தலைவர் ஒருவரை பகதூர்மிதித்துக் கொன்று விட்டது. இதையடுத்து பகதூரை அக்கிராம மக்கள் கொன்றுவிட்டனர். அதிக உஷ்ணம் காரணமாக பகதூருக்கு மதம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
அஸ்ஸாமில் உள்ள யானைகளுக்கு அடிக்கடி மதம் பிடிப்பது வழக்கம். ஆனால்அதற்காக இப்படி எந்த யானையும் கொடூரமாக கொல்லப்பட்டதில்லை. முதல்முறையாக இச்சம்பவம் நடந்துள்ளது.
அஸ்ஸாமில் உள்ள காடுகளில் மொத்தம் 2000 யானைகள் இருப்பதாகக்கூறப்படுகிறது. யானை கொல்லப்பட்டது குறித்து சோபுர் அலி கூறுகையில், எனதுமகனை இழந்தது போல உள்ளது. சிறு குட்டியாக இருந்தது முதலே, பகதூரை நான்எனது மகன் போல வளர்த்து வந்தேன் என்றார். இப்படிச் சொல்லும்போதே, அவரதுகண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பகதூர் கொல்லப்பட்டது முதலே சோபுர்அலி சாப்பிடாமல் இருந்து வருகிறார்.
உலகிலேயே அதிக அளவில் யானைகள் உள்ள பிரதேசம் அஸ்ஸாம். இங்கு 1996-முதல் அடிக்கடி யானைகளுக்கு மதம் பிடித்து வருகிறது. இதற்குக் காரணம் அங்குள்ளவனப் பகுதிகள் அழிக்கப்படுவதுதான். இங்கு மரங்களை வெட்டுவதற்குஉச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும் மரங்கள் வெட்டுவதுகுறைந்தபாடில்லை.
மரங்கள் அதிகம் வெட்டப்படுவதால் காடுகளில் உஷ்ணம் அதிகரித்து, யானைகளுக்குமதம் பிடிக்கிறது.
50 பேர், 20 யானைகள் சாவு:
கடந்த சில ஆண்டுகளில் மதம் பிடித்த யானைகளால் 50 பேர் வரைகொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட யானைகள் பதிலுக்குக்கொல்லப்பட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications