செயலை விட அதன் பயனை நேசித்தால்!
கொழும்பு:
யாழ்பாணத்தில் ராணுவம் புலிகளிடமிருந்து கடும் தாக்குதலை சந்தித்து வரும் நிலையில் இன்று (திங்கள்கிழமை)கொழும்பில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள 30 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பார்லிமென்டில் எம்.பிக்களேஇல்லாத பல கட்சிகளும் இதில் அடங்கும். பல தமிழ் கட்சிகளுக்கும் சந்திரிகா அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கூட்டத்துக்குப் பின் முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தனது எம்.பிக்கள், தலைவர்கள்கூட்டத்தையும் தனியே கூட்டியுள்ளது.
அனைத்துக் கட்சி கூட்டத்தைத் தொடர்ந்து கொழும்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலிடமிருந்து தங்களுக்கு ஆயுத உதவி கிடைத்து வருவதாக இலங்கை வெளியுறவுத்துறைஅமைச்சர் லட்மண் கதிர்காமர் கூறினார். இப்போது தான் இந்த உண்மையை இலங்கை முதல் முறையாகஒப்புக்கொண்டுள்ளது. சமீபத்தில் தான் இஸ்ரேலுடன் இலங்கை தனது தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டது.இதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் உதவியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதனை கதிர் காமர் மறுத்துள்ளார்.
டெல்லி வந்த கதிர்காமர் அங்கு இஸ்ரேலிய தூதரை சந்தித்தார். இதன் பின்னர் 48 மணி நேரத்தில்இலங்கை-இஸ்ரேல் உறவு ஏற்பட்டுள்ளது. ராணுவ உதவி வழங்க இந்தியா மறுத்ததையடுத்து இஸ்ரேலிடம்ராணுவ உதவியை கதிர்காமர் கேட்டார். இது தவிர மேலும் 7 நாடுகளிடம் உதவி கேட்டுள்ளதாகவும் அந்தநாடுகளிடமிருந்து 800 மில்லியன் டாலருக்கு ஆயுதங்கள் வாங்கி வருவதாகவும் கதிர்காமர் கூறியுள்ளார்.
1980ம் ஆண்டில் இலங்கைக்கு இஸ்ரேல் உதவியது. இலங்கை ராணுவத்துக்கு ரகசிய தகவல் சேகக்கும் பயிற்சி,கமாண்டோ பயிற்சி போன்றவற்றை வழங்கியது. ஆனால், 1990ம் ஆண்டில் இஸ்ரேலிய பயிற்சியாளர்களையும்இந்திய அமைதி காப்புப் படையையும் வெளியேறச் சொல்லிவிட்டார் அப்போதைய அதிபர் ரணசிங்கபிரேமதாசா.
ரஷ்யா, பிரிட்டன், பாகிஸ்தான், செக், இஸ்ரேல், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஆயுத விற்பனையாளர்கள்இலங்கைக்கு ஆயுதங்கள் விற்க போட்டி போட்டு வருகின்றனர். இந்த நாடுகளில் இருந்து ஆயுத விற்பனைக்குழுக்கள் இலங்கையில் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications