தமிழகத்தில் இன்று
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் இந்திய எல்லைக்குள் பெருமளவில் ஊடுறுவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முயற்சியை இந்தியராணுவம் மற்றும் விமானப் படையினர் பெரும் தாக்குதல் நடத்தி முறியடித்தனர்.
இந்த மோதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் நடந்தது.
எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஊடுறுவி விடலாம் என்ற தீவிரவாதிகளின் எண்ணத்திற்கு மாறாக, ராணுவத்தினர் மற்றும் விமானப் படையினர்அதிரடியாக புகுந்து தாக்குதல் தொடுத்தனர். முழுமையான அளவில் தீவிரவாதிகளின் முயற்சியை அவர்கள் முறியடித்தனர். தாக்குதலில் விமானப் படைஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ராணுவத்தினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரை பலமுறை விமானப்படை ஹெலிகாப்டர்கள் சம்பவஇடத்திற்கு அழைத்துச் சென்றன.
ஊடுறுவல் நடந்த பகுதியில் படையினர் தரை மார்க்கமாக செல்ல வழியில்லாததால், விமானப் படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. வனப்பகுதியில் ராணுவத்தினர் சென்றபோது, அவர்கள் மீது தீவிரவாதிகள் தானியங்கித் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். கிரனெட் குண்டுகளையும்வீசினர். படையினர் திருப்பித் தாக்கியதில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பத்கம் மாவட்டம், யூஸ்மார்க் என்ற வனங்கள் சூழ்ந்த பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்தீவிரவாதிகளின் இரண்டு மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. தீவிரவாதிகளிடமிருந்து நிறைய ஆயுதங்களும், தகவல் தொடர்பு சாதனங்களும் பறிமுதல்செய்யப்பட்டன.
கார்கில் போருக்குப் பிறகு பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக விமானப் படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
தீவிரவாதிகள் பெரும் திட்டத்துடன், பெருமளவிலான ஆயுத பலத்துடன் ஊடுறுவல் முயற்சியில் ஈடுபட்டனர். ராணுவத்தின் தாக்குதலைச் சமாளிக்கமுடியாமல் தீவிரவாதிகள் தப்பியோடினர். தீவிரவாதிகள் ஊடுறுவல் குறித்து சனிக்கிழமையே ராணுவத்திற்குத் தகவல் கிடைத்து விட்டது. இதனால்தீவிரவாதிகளின் முயற்சி வெற்றி பெறவில்லை.
துக்ளிக்சக்யார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த மோதலில், நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். மோதலின்முடிவில் நான்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 18 துப்பாக்கித் தோட்டாக்கள், 400 வெடி பொருட்கள், 36 கையெறி குண்டுகள், 2 வயர்லஸ் செட்டுகள்,இந்திய, பாகிஸ்தானிய ரூபாய் நோட்டுக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு சம்பவத்தில், அனந்த்நாக் மாவட்டம், அரூ என்ற பகுதியில் முகம்மது இஸ்ாமாயில் பட் என்பவரது வீட்டில் தீவிரவாதிகள் கையெறிகுண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிகிறது.
நெஷீரா என்ற இடத்தில் பாகிஸ்தானிய தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதேபோல, சூரன்கோட், பத்கம், பாரமுல்லாஆகிய பகுதிகளில தலா ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் முழுவதிலும் நடந்த தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications