தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கை பிரச்சனையில் விடுதலைப் புலிகளுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து வரும் பாமக, மதிமுக போன்ற கட்சிகள் புலிகள்மீதான தடை நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க மறுத்து விட்டன.
புலிகள் மீதான தடை மேலும் இரண்டாண்டுக்கு நீட்டிப்பது என்று தமிழக அரசு செய்த பரிந்துரையை ஏற்று மத்தியில் ஆளும்தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில்அங்கம் வகிக்கும் பாமக, மதிமுக போன்ற ஈழத் தமிழர் ஆதரவு கட்சிகள் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்று இக்கட்சிகள் விரும்பின. ஆனால், அந்த விருப்பத்தை வலியுறுத்தாமல்போனதற்கு, தேசிய ஜனநாயக் கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விடக் கூடாது என்று தமிழகத்தில் இக்கூட்டணிக்குதலைமை ஏற்றுள்ள திமுக கேட்டுக் கொண்டது தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவில் புலிகள் இயக்கத்திற்கு 1991ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறைஇத்தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரித்து வரும் கட்சியான திமுக ஆட்சிக்கு பிறகுஇதுவரையில் 3 முறை தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மூன்று முறையும் தமிழக அமைச்சரவை கூடி எடுத்த முடிவுப்படியேமத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போதும் திமுக அரசின் பரிந்துரைக்கு பின்னரே இம்முடிவை மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி அறிவித்துள்ளார்.இலங்கை ராணுவ உதவி கோரிய போது ஒருமித்த குரலில் உதவிகள் கூடாது என்று தமிழக கட்சிகள் பேசின. குறிப்பாக பாமக,மதிமுக போன்ற தீவிர ஆதரவு கட்சிகள் இலங்கை அரசை கடுமையாக சாடின. அதை ஏற்று மத்திய அரசும், இலங்கைகோரிக்கையை நிராகரித்தது.
அதேநேரத்தில் இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிப்புக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் என்றமுறையில் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது பற்றி பாமக தலைவர் ஜி.கே.மணியிடம் கேட்டபோது, ""புலிகள் மீதான தடைநீக்கப்பட வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். ஆனாலும், மத்திய அரசு இந்த முடிவை எடுத்து விட்டது. அதற்காகஎங்களது நிலையை மாற்றிக் கொள்ளமாட்டோம். தமிழ் ஈழத்திற்கான எங்களது தார்மீக ஆதரவு தொடரும். புதிய வலிவுடன்தமிழ் ஈழம் மலருவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
மதிமுக தலைவர் வைகோ கூறுகையில், ""புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு தான்.தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பங்குதாரர் என்ற முறையில் அரசு எடுத்த முடிவை மதித்து ஏற்பது தான் நாகரீகம் என்றார்.
இதற்கிடையில் தமாகா தலைவர் மூப்பனார் கருத்து தெரிவிக்கையில், ""தடை நீட்டிப்பை நாங்கள் முழு மனதுடன்வரவேற்கிறோம். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று பாராட்டியுள்ளார்.
""தடையை நீட்டித்தால் மட்டும் போதாது. அதை முழு கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று கூறிய தமிழக காங்கிரஸ்தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, ""மத்திய அமைச்சரவை எடுத்த இம்முடிவை எதிர்க்கும் கூட்டணிக் கட்சிகளை பிரதமர்வாஜ்பாய் கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
""இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இனப் பிரச்னைக்கு ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு உறுப்பினர் உமாநாத் கூறினார்.
ஆனால், புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு பந்துரை செய்த திமுக அரசு இதுவரையில் இதுபற்றி கருத்து தெவிக்கவில்லை.
1991ல் தடை விதிப்புக்கு காரணமாக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ""புலிகள் விஷயத்தில் 91ம் ஆண்டுநிலையில் மாற்றம் இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications