தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
வெளிநாட்டு இந்தியர்களுக்கு வீடு கட்ட கடன்- ஹட்கோ அறிவிப்பு

துபாய்:

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வீடு கட்டிக் கொள்ள கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசுநிறுவனமான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் (ஹட்கோ) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஹட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வி. சுரேஷ் கூறியதாவது:

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வீடு கட்டுவதற்கு வசதியாக அவர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தைஹட்கோ அறிமுகப்படுத்துகிறது. தனி நபர் கடனாக இக் கடன் வசதி அளிக்கப்படும். கடன் பெறுபவர்பயனடையும் வகையில் பல சிறப்பு அம்சங்கள் இத் திட்டத்தில் உள்ளன.

வழங்கப்படும் கடன் தொகைக்கு மாத வாடகை அடிப்படையில் ஆண்டுக்கு 13 சதவீத வட்டி வசூலிக்கப்படும்.வீட்டின் கட்டுமான மதிப்பீட்டில் 85 சதவீதம் அல்லது ரூ.50 லட்சம் அல்லது இரண்டில் எது குறைவோ அத் தொகைகடனாக வழங்கப்படும். 10 ஆண்டுகளில் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தவேண்டும். கடன் வாங்கியவர்,அக் கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதியைப் பொறுத்து கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.

வெளிநாடுகளில் பணிபுரிந்து மாத வருமானம் நிலையாக உள்ளவர்களுக்கும், குறைந்தபட்சம் கடந்த ஓராண்டாகவெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும், பணி மாற்றம் காரணமாக வெளிநாட்டுக்குச் செல்ல நேர்ந்த இந்தியத் தூதரகஅலுவலக ஊழியர்களுக்கும் இக் கடன் வசதி அளிக்கப்படும்.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தனி நபர் வீட்டு வசதிக் கடன் திட்டம் ஹட்கோ நிவாஸுக்கு நல்ல வரவேற்புஉள்ளது. இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திலேயே 1.81 லட்சம் பேருக்கு மேல் சுமார் ரூ.1300கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்குத் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் வளைகுடாநாடுகளில் வாழும் இந்தியர்கள் அதிகம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது வசதிக்காகதுபாயில் ஹட்கோ பிரதிநிதி அலுவலகம் விரைவில் அமைக்கப்படும்.

இந்தியாவில் வீடு கட்டுவதற்கு கடன் வழங்கும் நிறுவனங்களில் ஹட்கோ முதலிடத்தில் உள்ளது. கடந்த 30ஆண்டுகளாக வளர்ந்த நிலையில் ஹட்கோ உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 35 சதவீதம் வளர்ச்சி கண்டது.இந்தியாவில் கட்டப்படும் 17 வீடுகளில் ஒரு வீட்டுக்கு ஹட்கோ கடன் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதுஎன்றார் சுரேஷ்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+