தமிழகத்தில் இன்று
கோயம்பத்தூர்:
ஊட்டியில் ஆண்டுதோறும் அரசின் சார்பில் நடத்தப்படும் மலர்க் கண்காட்சி, தேயிலை விவசாயிகள் போராட்டத்தையடுத்து இந்த ஆண்டு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் போராட்டத்தில் வன்முறை மூண்டது. இதில் 20 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு ஆதார விலையை அதிகரிக்கக் கோரி தேயிலை விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.திங்கள்கிழமை மாலை சுமார் 10,000-க்கும் அதிகமான விவாசியகள் அரை நிர்வாண கோலத்தில் ஊர்வலம் நடத்தினர்.
பின்னர் இவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் பலமுறை கேட்டுக் கொண்டனர். அப்போதுவிவசாயிகள் போலீஸார் மீது கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர். இதில் சுற்றுலா பயணிகளின் 20 வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பலகடைகளுக்குச் சேதம் ஏற்பட்டது. 7 போலீஸாரும் காயமடைந்தனர்.
விவசாயிகள் வன்முறையில் இறங்கியதையடுத்து போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.
மலர்க் கண்காட்சி ரத்து:
விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்திருப்பதையடுத்து இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்படுவதாக மாவட்டஆட்சியர் சிவசங்கரன்அறிவித்துள்ளார். மலர்க் கண்காட்சி நடைபெறும் தாவரவியல் பூங்காவின் நுழைவாயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் காரணமாக மேட்டுப்பாளையம்-கோவை இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊட்டியிலும், தாவரவியல்பூங்காவிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications