தமிழகத்தில் இன்று
விஜயவாடா:
போலி ரெயில்வே பாஸ் தயாரித்து விற்ற விஜயவாடா நகர காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு அமைப்பாளர் சுப்பாராவ் கைது செய்யப்பட்டார்.
இது குறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
விஜயவாடாவில் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி.,பிரிவு அமைப்பாளராக இருப்பவர் சுப்பாராவ். இவர் தன்னுடைய கட்சித் தொண்டர்களிடம் ரெயில்வே பாஸ் வழங்கிஅதற்காக ரூ 200 முதல் 500 வரை ஒவ்வொருவரிடமும் பணம் வசூலித்தார்.
பலரிடம் பணம் வசூலித்ததில் மொத்தத்தொகை ரூ1 லட்சம் வரை வசூலானது. இந்த ரெயில்வே பாஸின் மூலம் ஹைதராபாத்திலிருந்து சென்னையில் ராஜீவ்காந்தி நினைவிடமான ஸ்ரீபெரும்புதூர் வரைப் பயணம் செய்து அவரது நினைவிடத்தைப் பார்க்கலாம் என்றும், தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம்செய்யலாம் என்றும் கட்சித்தொண்டர்களிடம் கூறி பணம் வசூலித்தார்.
குண்டூர் மற்றும் கிருஷ்ணா பகுதியிலிருந்து 3,000 க்கும் மேற்பட்டோர் இந்த ரெயில்வே பாஸை பணம் கொடுத்து வாங்கினார்கள்.
அதில் சிலர் செவ்வாய்க்கிழமை விஜயவாடாவிலிருந்து சென்னை வரும் ரெயிலில் இந்த பாஸைக் காட்டி பயணம் செய்ய முயன்றார்கள். டிக்கெட் பரிசோதகர்பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த ரெயில்வே பாஸ்கள் அனைத்தும் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறித்த நகர காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு அமைப்பாளர் சுப்பராவைப் போலீசார் கைது செய்தனர். அவர் மேல்வழக்குப் பதிவு செய்து இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications