தமிழகத்தில் இன்று
புலிகளை சமாளிக்க இலங்கை செல்கிறார் கே.பி.எஸ். கில்
டெல்லி:
விடுதலைப் புலிகளை சமாளிக்க, பஞ்சாபில் தீவிரவாதிகளை அழித்து தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டிய இந்தியகாவல்துறை அதகாரி கே.பி.எஸ். கில்லின் உதவியை இலங்கை அரசு நாடியுள்ளது.
இவர் கொழும்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இலங்கை அரசுக்கு ஆலோசனைவழங்குவார். 2 தினங்களில் கொழும்பு செல்ல உள்ளதாக இன்டியா அப்ராட் செய்தி நிறுவனத்துக்கு அளித்தபேட்டியில் கில் கூறினார்.
தீவிரவாதத்தை பொறுத்தமட்டில் பஞ்சாபுக்கும் இலங்கைக்கும் ஏதாவது ஒற்றுமை உண்டா என்று கேட்டபோது,இதற்கு இப்போது பதில் தர முடியாது, பின்னால் சொல்கிறேன் என்றார்.
இலங்கையின் முக்கிய பிரமுகர்களை (விவிஐபி) பாதுகாக்க தேவையான ஆலோசனைகளை கில் வழங்குவார்.
1988ம் ஆண்டில் பஞ்சாபில் பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கிய தீவிரவாதிகளை கோவிலுக்குள்ளேயேசென்று தாக்கினார். இதன் மூலம் அங்கு தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் பணியை துவக்கினார்.
இப்போது இலங்கை அரசு உதவி கோரியுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கைசந்தித்து கில் பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், கில்லின் இலங்கை பயணத்துக்கும் இந்திய அரசுக்கும் எந்ததொடர்பும் இல்லை என வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications