தமிழகத்தில் இன்று
தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாசிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள்ஆகியோருக்கு அரசு வேலைகளில் செய்யப்பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டின்படியானஇடங்கள் ஒரு வருடத்தில் நிரப்பப்படவில்லை என்றால், பிறகு தோன்றும் காலிஇடங்களோடு இந்த நிரப்பப்படாத இடங்களும் சேர்ந்து விடும் - என்ற நிலைஇருந்தது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவினால் ஏற்பட்டிருந்த இந்த நிலைய, மாற்றி விட மத்தியஅரசு ஒரு அரசியல் திருத்தத்தை லோக் சபையில் நிறைவேற்றி இருக்கிறது.
ஆதரவு -418; எதிர்ப்பு– 1.
இதைத்தவிர, சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி ஓர் உறுதி மொழியையும்தந்திருக்கிறார். 50 சதவீதத்திற்கு அதிகமான இட ஒதுக்கீடு செய்து வரும் மாநிலங்கள்உள்ளன. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடுஇருக்கக்கூடாது. இதுவே கோர்ட்டின் இறுதித் தீர்ப்பாகி விட்டால், அப்போதுதேவையான சட்ட திருத்தத்தைச் செய்வோம்.
50 சதவீதத்திற்கும் அதிகமான இட ஒதுக்கீடு செய்யும் மாநிலங்களில் உள்ள ஏற்பாடுகாப்பாற்றப்படும் என்று அவர் கூறுயிருக்கிறார். அதாவது - நீதிமன்றத் தீர்ப்பு எப்படிஇருந்தாலும், அது பற்றி கவலை இல்லை. அதை செல்லாததாக்குகிற வகையில் சட்டதிருத்தம் செய்யப்படும்.
உத்திரப் பிரதேச பா.ஜ.க. அரசை, மத்திய ஐக்கிய முண்ணனி அரசு டிஸ்மிஸ்செய்தபோது நீதிமன்றம் அதை தள்ளி வைத்தது. அப்போது பா.ஜ.க.வினர் நீதிமன்றமேசொல்லிவிட்டது பார் என்றனர். அயோத்தி விவகாரத்தில் பா.ஜ.க. நீதிமன்றத்தையேஅவமதித்துவிட்டதே! ஐயோ! இப்படி செய்யலாமா? இதை விட ஒரு அட்டூழியம்உண்டா? என்று காங்கிரஸ் கதறியது.
காவிரிப் பிரச்சனையில் நீதிமன்றம் சொல்வதை கர்நாடகம் எப்படி அவமதிக்கலாம்என்று தி.மு.க. கேட்காத நாள் இல்லை. இப்படி நீதி மன்றத்தின் மாட்சிமை பற்றி வாய்கிழிய பேசிய கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஓட்டளித்து, நீதிமன்ற உத்திரவைசெல்லாக்காசாக மாற்றி விட முனைந்திருக்கின்றன. இட ஒதுக்கீட்டைக் காட்டி,ஓட்டுக்களை பெற்று விட முடியும் என்பது சர்வ கட்சிகளின் நம்பிக்கை. அதனால் தான்இப்படி நடக்கிறது.
50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியது,முற்றிலும் நியாயமான நிலை. அதே போல - இட ஒதுக்கீடு பெறுகிற சமூகங்களில்உள்ள வசதிகளும், வாய்ப்புகளும் பெற்று முன்னேறி விட்டவர்கள் -க்ரீமீ லேயர் என்றஅளவில் அடங்குபவர்கள் -இட ஒதுக்கீட்டில் உரிமை பெற முடியாது என்று சுப்ரீம்கோர்ட் கூறியதும் நியாயமே.இதையும் கூட ஏற்க அரசியலில் கட்சிகள் தயாராகஇல்லை.
உண்மையாகவே தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வாய்ப்புஉண்டாக்குவதுதான் இக்கட்சிகளின் எண்ணம் என்றால், இந்த க்ரீமீ லேயர் உத்தரவைஅவர்கள் வரவேற்றிருப்பார்கள்.ஆனால், உண்மையான எண்ணம் ஓட்டு வேட்டைஎன்பதால், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் வசதிபெற்றவர்களை திருப்தி செய்வதே இவர்களுடைய முதல் குறிக்கோள் ஆகிறது.
அதனால் க்ரீமீ லேயர் என்ற யோசனையை நிராகரிக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இடஒதுக்கீடு, கூடிக் கொண்டேபோகிறது என்றால் - இட ஒதுக்கீட்டில் புதுப்புது ஜாதிகள் இடம் பெறுகின்றன என்றால்- என்ன அர்த்தம்?ஐம்பது வருட இட ஒதுக்கிட்டினால் எந்தப் பயனும் ஏற்படவில்லைஎன்றுதானே அர்த்தம்?
உண்மையாகவே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் நலன் பற்றியஅக்கறை இந்த அரசியல்வாதிகளுக்கு இருந்திருந்தால் , ஐம்பது ஆண்டுகளாகியும் இடஒதுக்கீடு தொடர வேண்டியது அவசியமாக இருப்பது ஏன்? என்ன செய்தால் நல்லபயன் விளையும்? என்று இவர்கள் ஆராயத் தொடங்கி இருப்பார்கள்.
அப்படிச் செய்யாமல் மேலும் மேலும் ஜாதிகளைச் சேர்ப்பதுமாக இவர்கள்செயல்படுவது - இவர்களுடைய அக்கறை ஓட்டின் மீதுதானே தவிர மக்கள் நலன் மீதுஅல்ல என்பதைத்தான் காட்டுகிறது.
இட ஒதுக்கீடு கொடுத்து விட்டால் போதாது; திறமையை விரட்டி அடிப்பது மட்டுமேஇதனுடைய சாதனையாகப் போய்விடும்.கல்வி, உணவு, தங்குமிடம் ஆகியமூன்றையும் வசதியற்றவர்களுக்கு அளிக்கும் வகையில் ஒரு திட்டம் கொண்டுவருவதுதான் ஒரே வழி. இதற்குப் பணம் தேவைப்படும் என்பது உண்மையே; ஆனால்மனம் தேவைப்படும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இரண்டாவது இருந்தால்,முதலாவதற்கு வழி பிறக்கும்.
இந்த கட்டுரை குறித்து உங்கள் கருத்தை அனுப்பவும்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications