தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சோனியா காந்தியின் தலைமையை எதிர்த்து, காங்கிரஸில் தோன்ற

ஆரம்பித்திருப்பது - சலசலப்புதான்; அவருடைய தலைமைக்கு பெரிய எதிர்ப்புகிளம்பி விடவில்லை. ஆனால், சில அதிருப்தியாளர்கள் பகிரங்கமாகப் பேசத்தொடங்கி விட்டார்கள் என்பதே கூட, கட்சியில் அவருடைய அதிகாரம் கொஞ்சம்தளர ஆரம்பித்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.

இப்படிப்பட்ட ஒரு நிலை தோன்றுவதற்குக் காரணத்தைத் தேடி அலையவேண்டியஅவசியம் இல்லை. கட்சியின் அகில இந்திய தலைவருடைய ஓட்டு பெறும்சக்தியைநம்பியே, வாழ்ந்து பழகி விட்டது காங்கிரஸ். தலைமைக்குத் தாளம் போடுவதுஒன்றே தாங்கள் ஆற்ற வேண்டிய கட்சிப் பணி என்ற எண்ணம் காங்கிரசாருக்குவளர்ந்து விட்டது.

அதற்குக் காரணமானவர் இந்திரா காந்தி. அவர் காலத்திலும், பின்னர் ராஜீவ் காந்திகாலத்திலும்,தலைவர் ஓட்டு பெற்றார். அவரை நம்பியிருந்தவர்கள பதவிகளைப்பெற்றார்கள். ஓட்டு வாங்கும் சக்தி தலைவருக்கு இருந்ததால், பல்வேறுமாநிலங்களிலும், பொம்மைகளை வைத்துக்கொண்டே அவர்களால் கட்சியை நடத்தமுடிந்தது. மாநிலத் தலைமையின் பலவீனம் கட்சியை பெரிதாக பாதிக்கவில்லை.

இப்போதைய தலைமைக்கோ - அந்த ஓட்டு வாங்கும சக்தி இல்லை. ஆனால் முன்புபோலவே பல்வேறு மாநிலங்களிலும் பொம்மைகளை வைத்துக் கொண்டே கட்சியைநடத்த தலைமை முயல்கிறது. அகில இந்திய தலைமைக்கும் ஓட்டுக்களைப் பெற்றுத்தரக்கூடிய அளவுக்கு மக்களிடையே ஆதரவில்லை. - மாநிலத் தலைமைகளும்பூஜ்யம். - என்ற நிலை தோன்றிவிட்டதால், கட்சி பலவீனடைந்து கொண்டே போகிறது.

தொடர்ந்து வரும் தோல்விகள் தரும் ஏமாற்றம், கட்சித் தலைமைக்கு எதிர்ப்பைத்தோற்றுவிக்க ஆரம்பித்திருக்கிறது; பலவீனம் வளர்கிறது.

காங்கிரஸின் பலவீனம் பா.ஜ.க.வின் பலமாக மாறினாலாவது பரவாயில்லை, ஆனால்,பல மாநிலங்களில் நிலவுகிற சூழ்நிலை இதுவல்ல. காங்கிரஸின் இழப்பு ஏதாவது ஒருமாநிலக் கட்சியின் ஆதாயமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.

இதுதவிர, ஏற்கனவே நாம் பலமுறை சொல்லியிருக்கிற மாதிரி, பல மாநிலங்களிலும்ஓரளவாவது மக்கள் ஆதரவு பெற்றுள்ள கட்சியாக இருப்பது காங்கிரஸ்தான். அதுபலவீனமடைந்து கொண்டே போவதும், மாநிலக் கட்சிகள் அதனால் ஆதாயம்பெறுவதும், நாட்டின் எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல.

இந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கவேண்டுமென்றால், கட்சியின் மாநில அமைப்புகள் வலுவுள்ளவையாகமாற்றப்படவேண்டும். தன்னை மிஞ்சி விடுவாரோ என்று அஞ்சி, பலம்வாய்ந்தவர்களை ஆங்காங்கே ஒதுக்கி வைத்து விடாமல், அவர்களையேமாநிலத்தலைவர்களாக ஏற்,க, அகில இந்தியத் தலைமை முன்வரவேண்டும்.

ஏனென்றால், அகில இந்தியத் தலைமை ஓட்டு வாங்கி, அதில் மாநில தலைமை பலன்கண்ட காலம் மலையேறிவிட்டது.; பல மாநிலங்களிலும் கட்சியின் அமைப்புகள்முறையாக செயல்பட்டு , ஓட்டு வாங்கிக் கொடுத்து, அகில இந்திய தலைமைக்கு உதவவேண்டிய சீஸன் இது.

ஆகையால், சோனியா காந்தி கட்சி வளர வேண்டுமே என்ற நல்லெண்ணத்தில்இல்லாவிடாடலும் - தனது தலையைைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவது,மாநிலங்களில் நல்ல தலைமையை வளர்க்க வேண்டும். இதோடு ஆங்காங்கேதேவைப்படுகிற கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் காங்கிரஸ் தயங்க்ககூடாது.

இம்மாதிரி செயல்பட காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமைமுன்வராவிட்டால், காங்கிரஸ் தானும் கெட்டு, நாட்டையும் கெடுக்கும்.

இந்த கட்டுரை குறித்து உங்கள் கருத்தை அனுப்பவும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+