தமிழகத்தில் இன்று
பாஸ்டன்:
பார்கின்சன் நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்து இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நரம்பியல் வியாதியான பார்கின்சன் நோய், அமெரிக்கா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் அதிக அளவில் உள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர்ரீகன், குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி ஆகியோர் இந்த வியாதியால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தற்போது இந்த வியாதியை ஆரம்ப நிலையில் கண்டறிந்து விட்டால், ஐந்து ஆண்டுகள் வரை, நரம்புகளுக்கு அதிக பாதிப்பில்லாத வகையில்சிகிச்சையளிக்கும் வகையிலான மருந்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்மித்கிளைன் பீச்சேம் மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது.
ரோபினோல் என்ற இந்த மருந்தை துவக்க நிலை வியாதியஸ்தர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் பார்கின்சன்வியாதியை கட்டுக்குள் கொண்டு வந்து குணப்படுத்த முடியும் என்று இந்த நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்துக்குப் பிறகு தேவைப்பட்டால், தற்போதைய சிகிச்சை முறையில் தரப்படும் லெவோத்பா மருந்தைக் கொடுக்கலாம் என்றும் அவர்கள்கூறினர்.
வயதானவர்களை மட்டுமே பார்கின்சன் வியாதி தாக்குகிறது. 15 சதவீதம் பேருக்கு அவர்களுக்கு 50 வயதாகும் முன்பே இந்த வியாதிகண்டுபிடிக்கப்பட்டு விடுகிறது.ஆனால் வீரியம் அதிகமான லெவோத்பா மருந்து கொடுக்கப்படுவதால் அவர்களது நரம்புகள் விரைவில் தளர்ச்சியடைந்துவிடுகின்றன. மேலும் இந்த மருந்து வியாதியைக் குணப்படுத்துவதில்லை. கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள மட்டுமே உதவுகிறது.
5 லட்சம் அமெரிக்கர்கள் பார்கின்சன் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.


Click it and Unblock the Notifications
