தமிழகத்தில் இன்று
சென்னை:
உண்மைக்கு புறம்பான தகவல்களை சொன்ன காரணத்திற்காக அதிமுக உறுப்பினர் சுந்தரம் மீது விசாரித்து நடவடிக்கைஎடுக்கும்படி சட்டமன்ற உரிமைக்குழுவுக்கு சபாநயகர் பழனிவேல்ராஜன் உத்தரவிட்டார்.
சட்டசபையில் வியாழக்கிழமை இதுகுறித்து அவர் அளித்த தீர்ப்பு வருமாறு:
சேலத்தில் நில ஆர்ஜிதம் தொடர்பாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது சுந்தரம் குற்றம் சாட்டினார். என்னிடம் அனுமதிபெறாமல் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார். அதனால் பெரிய விவாதமே ஏற்பட்டது. இருவரும் எழுந்து நின்று பேசினர்.ஒருமையில் கூட பேசினர்.
அப்போது அமைச்சர் தன்னை தாக்க முயற்சித்தார் என்று சுந்தரம் ஒரு உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தார். என்னிடம்அனுமதி பெறாமல் கொண்டு வந்த பிரச்சனை என்பதால், இதில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது நடவடிக்கை எதுவும்எடுக்க வேண்டிய ஒன்றும் இல்லை என்று தீர்ப்பளிக்கிறேன்.
அதேநேரத்தில் சுந்தரத்தின் மீது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஒரு உரிமை மீறல் பிரச்சனை கொடுத்தார். சேலம் நில விவகாரம்தொடர்பாக நீதிமன்றத்தில் அரசால் தடையாணை பெறப்படவில்லை என்று சுந்தரம் குற்றம் சாட்டியபோது, அதை மறுத்தஅமைச்சர் அதற்கு ஆதாரம் இருக்கிறது என்றார்.
மறுநாள் அதற்கான நீதிமன்ற தடையாணை உத்தரவை சமர்ப்பித்தார். எனவே சபைக்கு உண்மைக்கு மாறான தகவல்களைசொன்ன சுந்தரம் மீது உரிமை மீறல் பிரச்னை கொடுத்தார்.
அதை விசாரித்து சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்கும்படி உரிமை மீறல் குழுவுக்கு உத்தரவிடுகிறேன் என்றார் சபாநாயகர்.
முன்னதாக எதிர்க் கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், அமைச்சர் துரைருகன் ஆகியோர்களுக்கு இடையே டெண்டர்விடப்பட்டது பற்றி எழுந்த விவாதம் தொடர்பான உரிமை மீறல் பிரச்னைகளை சபாநாயகர் தள்ளுபடி செய்தார்.
அதேபோல் தமாகா உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் பேசும்போது, சிங்கிள் டெண்டர் முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக இந்தஅரசு கூறுகிறது. ஆனால், ஆடிட் ரிப்போர்ட்டில் அது நடைமுறையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது என்று புகார் கூறினார். இதைஅப்போதே அமைச்சர் ரகுமான்கான் மறுத்தார். அந்த ஆடிட் ரப்போர்ட் 92-93ம் ஆண்டுக்கானது என்றார். அதுபற்றிசெல்லக்குமாரிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, "ஆடிட் ரிப்போர்ட்டில் ஏற்பட்ட அச்சுப் பிழையால் இது நடந்துவிட்டதுஎன்றார்.
அவர் தெரிந்தே பேசியிருப்பார் என்றாலும், அவரை எச்சரித்து விட்டு விடுகிறேன் என்றார் சபாநாயகர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications