தமிழகத்தில் இன்று
சென்னை:
தெலுங்கு கங்கைத் திட்டத்தின் படி சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் கொண்டு வருவதற்காக தமிழக அரசு இதுவரை 512 கோடிரூபாய் செலவிட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக 7.01 டிஎம்சி தண்ணீர் பெறப்பட்டுள்ளது. இப்போது வினாடிக்கு 50 கன அடி தண்ணீர்வந்துகொண்டிருக்கிறது என்று தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைருகன் தெரிவித்தார்.
மேலும், சென்னைக்கு ஆந்திரா அரசால் வழங்கப்பட்டிருப்பது கிருஷ்ணா நதி நீர் தானே தவிர பெண்ணையாற்று நீரல்ல என்றும்அமைச்சர் விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமை கிருஷ்ணா நதி நீர் பிரச்னை பற்றிய சிறப்புவிவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அழகிரி (தமாகா), சுப்பராயன் (சிபிஐ), சுந்தரம் (அதிமுக), ஐ.கணேசன் (பாமக),சந்தானம் (பார்வர்டு பிளாக்), ஹேமச்சந்திரன் (சிபிஎம்), நாசர் (த.மா.தேசிய லீக்), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்),அப்துல் லத்தீப் (தேசிய லீக்) ஆகியோர் பேசினர்.
அழகிரி, சுப்பராயன், சுந்தரம் போன்ற எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பேசுகையில், சென்னைக்கு இப்போது கொண்டுவரப்பட்டிருப்பது கிருஷ்ணா நதி நீரே அல்ல. அது பெண்ணையாற்று நீர் என்று கூறப்படுகிறது. 13 கிலோ மீட்டர் தூரம் கால்வாய்வெட்டப்படாமல் கிருஷ்ணா நதி நீர் எப்படி கொண்டு வரமுடியும். எனவே இதுபற்றிய உண்மையை அறிய எம்எல்ஏக்கள்குழுவை அமைக்க வேண்டும் என்றனர்.
"நியூட்டன் கண்டுபிடிப்பு என்று புத்தகத்தில் படித்துள்ளோம். அதேபோல் 13 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்டப்படாமல்கிருஷ்ணா நீர் கொண்டு வருவது எப்படி என்பதை துரைருகன் கண்டுபிடித்துள்ளார். எனவே இது துரைருகன் கண்டுபிடிப்பு என்றுசொல்லலாம் என்றார் அழகிரி கிண்டலாக.
"இந்த பிரச்னையில் கிருஷ்ணா நதி நீரை கொண்டு வர முடியாததற்கு பொறுப்பேற்று அமைச்சர் துரைமுருகன் ராஜினாமா செய்யவேண்டும் என்று சுந்தரம் வலியுறுத்தினார்.
"இது இரு மாநில சம்பந்தப்பட்ட விவகாரம். இதில் அரசியல் பார்க்கக் கூடாது என்றார் லத்தீப்.
பின்னர் அமைச்சர் துரைருகன் விளக்கம் அளித்துப் பேசினார். அவர் கூறியதாவது:
கிருஷ்ணா நதி நீர் 29.6.96 அன்று முதன் முதலாக சென்னைக்கு வந்தது. ஸ்ரீசைலத்தில் இருந்து சோமசீலா வழியாக கண்டலேறுஅணைக்கு வந்ததாக ஆந்திர நீர்பாசனத் துறை செயலாளர், தமிழக அரசுக்கு எழுதியுள்ளார்.
ஆந்திர முன்னாள் தல்வர் ஜனார்த்தன்ரெட்டி, சென்னைக்கு கொடுக்கப்பட்டது பெண்ணை ஆற்று நீர் தான் என்றார். இதை ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு மறுத்துள்ளார். சென்னைக்கு 9.5 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீர் தந்துள்ளோம் எனறார். ஒரு முதல்வர்கூறியுள்ள இந்த தகவல் உண்மையல்ல என்று நீங்கள் நம்புகிறீர்களா?
உலக வங்கிக் குழு 40 நாட்கள் பயணம் செய்து ஸ்ரீசைலம் முதல் செங்குன்றம் வரை சுற்றிப் பார்த்து ஒரு சான்றிதழ் அளித்துள்ளது.அதில், 13 கிலோ மீ ட்டர் தூரம் கால்வாய் வெட்டப்படாமல் நப்பிலவாடு ஓடை வழியாக சென்னைக்கு தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆந்திராவில் காங்கிரசார் கிருஷ்ணா நீர் தருவதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய போது, முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ்தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு பதிலளித்த சோனியா, ஆந்திரா மாநில விவகாரங்களைகவனிக்கும் ஆர்.கே.தவானுக்கு இந்த விளக்கத்தை சொல்லுங்கள் என்றார். அதன்படி தவானுக்கு நான் கடிதம் அனுப்பினேன்.அதில் எல்லா விளக்கங்களும் உள்ளன.
கிருஷ்ணா நதி நீநர் திட்டத்திற்காக இதுவரை 512 கோடி ரூபாய் தமிழக அரசு செலவு செய்துள்ளது. நீங்கள் சொல்வதுபோல்ஆயிரம் கோடி செலவு செய்யவில்லை. ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் தர உடன்பாடு செய்யப்பட்டது. ஆனால், நான்குஆண்டுகளில் 7.01 டிஎம்சி தண்ணீர் தான் நமக்கு கிடைத்துள்ளது. ஆனால், ஆந்திரா அனுப்பி வைத்த தண்ணீர் 9.5 டிஎம்சி.
இப்போது 25.3 மில்லியன் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. குறைவாக பெற்றாலும், நாம் பெற்ற தண்ணீர் கிருஷ்ணாதண்ணீர் தான். இது உறுதி. கிருஷ்ணா நிதி நீர், பெண்ணையாற்றில் கலந்து தான் வருகிறது. இப்போதும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்றார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications