தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக்கடத்தல் கும்பலை பிடிக்க இன்டர்போல் உதவி

டெல்லி:

காத்மாண்டுவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகளை பிடிக்க இன்டர்போல் உதவியை சிபிஐ நாடியுள்ளது.

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தியவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது.

1999ம் ஆண்டு மொத்தம் 7 பேர் கொண்ட கும்பல் ஐசி 814 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தானிலுள்ள கான்டகருக்குக் கடத்திச்சென்றார்கள்.

கடத்தல்காரர்களின் உத்தரவுப்படி இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று தீவிரவாதிகளை விடுவித்த பின்னர் தான் இந்த விமானத்தையும்பயணிகளையும் அவர்கள் விடுவித்தாகள். அவர்களை தட்டிக் கேட்ட ஒருவரை குத்திக் கொன்றனர்.

விமானத்தில் பயணம் செய்த 150 பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே இந்திய அரசு கடத்தல்காரர்களை இந்திய அரசு விடுதலை செய்தது.

பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த விமானக் கடத்தலில் தொடர்புடையவர்கள் என்று கருதி இப்ராஹிம், இப்ராஹிம் அக்தர், சன்னி அஹமது, யூசுப்ஆசார், அப்துல் ராப் ஆகியோருக்கு வாரன்ட் பிறப்பித்துள்ளது.

இந்த நேரத்தில் சிபிஐயினர் இந்த விமானக் கடத்தல் குறித்து விவாதிக்க இன்டர்போல் போலீசாரைத் தொடர்பு கொள்ள தீர்மானித்துள்ளனர்.

இந்தக் கடத்தலில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்க சிபிஐ அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதுவரை அப்துல் லத்தீப், பூபால்மர்,திலீப் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக்கடத்தலில் பாகிஸ்தானுக்கும் தொடர்பிருக்கும் என்று சிபிஐ நம்புவதால் அவர்கள் இன்டர்போல்போலீசாரை அணுகுவதென்று முடிவு செய்துள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+