தமிழகத்தில் இன்று
பெங்களூர்:
கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திற்கு செல்லவில்லை. அவர் அக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களுக்கிடையே காவிரி நீர் பிரச்சனை இருந்து வருகிறது.
இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக காவிரி நதி நீர் ஆணையம் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 1998 ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து பேச நான்கு தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தை வெள்ளிக்கிழமை டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.
ஆனால், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நாளை டெல்லி செல்லவில்லை என்று தெரிவித்துவிட்டார். பிரதமர் வாஜ்பாய் என்னிடம் காவிரி நதிநீர்பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு நாளை வருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் எனக்கு இங்கே வேலைகள் இருப்பதால் என்னால் காவிரி நதிநீர்பிரச்சனை குறித்துப் பேச என்னால் அங்கே செல்ல முடியாது. ஒரு வாரம் கழித்து இந்த நான்கு மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று நான்பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன்.
ஜூன் ஆறாம் தேதிக்குப்பின் இந்தக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னேன். ஆனால் காவிரி பிரச்சனையில் கர்நாடகம் காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை மீறிநடப்பதாக தமிழ்நாட்டிலிருந்து பிரதமருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதால் இக்கூட்டத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
எனக்கு இங்கே வேலைகள் இருப்பதால் நான் நாளை நடக்கும் கூட்டத்திற்குச் செல்லவில்லை.
இவ்வாறு முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நிருபர்களிடம் கூறினார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications