தமிழகத்தில் இன்று
லண்டன்:
யாழ்ப்பாணத்திற்கு 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கைத்தடி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 100-க்கும்மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ராணுவ முகாமைக் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் லண்டன் அலுவலகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த சண்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும்விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
புதன்கிழமை மாலை கைத்தடி முகாம் மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மிகவும் பாதுகாப்புடன் கூடிய முகாம் கைத்தடி. சுமார் 12 மணி நேரம் நடந்தகடும் மோதலுக்குப் பிறகு ராணுவ முகாம் தங்கள் வசம் வந்ததாக புலிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் வழியில் முக்கியபோக்குவரத்து இடமாக கைத்தடி உள்ளது. இங்கிருந்துதான் யாழ்ப்பாணம் நகருக்குள் உணவு மற்றும் ஆயுதங்களை இலங்கை ராணுவம் எடுத்துச் சென்றுகொண்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் பலாலி விமான நிலையத்திற்கு இடையில் கைத்தடி உள்ளது. இப்போது புலிகள் வசம் இந்த முகாம் வந்துள்ளதால் யாழ்ப்பாணம்நகரில் உள்ள ஆயிரக்கணக்கான ராணுவத்தினருக்கு உணவு மற்றும் ஆயுத சப்ளை நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
புலிகளின் கடும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவ வீரர்களில் பலர் முகாமிலிருந்து தப்பி ஓடியதாக புலிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இறந்த ராணுவ வீரர்களின் உடல்களையும் எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் தப்பி விட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவ முகாமிலிருந்த நவீன ஆயுதங்கள், ராணுவ டாங்குகள் போன்றவற்றை புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைத்தடி புலிகள் வசம் வந்துள்ளதால், சாவகச்சேரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் புலிகள் அடுத்துத் தாக்குதல் நடத்துவார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதிகளில் ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே தொடர்ந்து கடும் சண்டை நடந்து வருகிறது. யாழ்ப்பாணம்நகரில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வாலிகாமம் பகுதிக்குச் சென்று விடுமாறு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களைக் கட்டாயப்படுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றுவதாக கூறப்படும் புகாரையும் புலிகள் மறுத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications