தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
அமெரிக்காவில் படிக்கும் 3 இந்திய மாணவர்களுக்கு விருது

சான் பிரான்சிஸ்கோ:

அமெரிக்காவில் படித்து வரும் 3 இந்திய மாணவர்களுக்கு சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளைஉருவாக்கியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. மாணவர்களின்கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப 3 பிரிவுகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

அதன்படி, 17 வயதான சவுரவ் சென்குப்தா, அருணா வெங்கடேசன், விமல் பலோடியா ஆகிய மூன்று இந்தியவம்சாவழி மாணவர்கள் சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கியதற்காக, முதல் பிரிவில் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும் 17 அமெரிக்கர்கள் முதல் பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய வம்சாவழி மாணவர்கள் மூன்று பேரும் தங்களது அபாரமான திறமையால், மற்றவர்கள் நன்மையடையும்வகையில் கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளனர். முழு ஈடுபாட்டு காட்டி கண்டுபிடிப்புகளை உருவாக்கியதால்முதல் பிரிவில் இவர்கள் இடம் பெற்றனர் என்று தேர்வுக் குழு உறுப்பினர் தெரிவித்தார்.

இவர்களுக்கு கோப்பையும், 2,500 அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்படும். இவர்களைத் தவிர பினீத்கோத்தாரி, ஜெயா பத்மநாபன், சித்தார்த் ஷெனாய் ஆகிய இருவர் இரண்டாவது பிரிவிலும், சித்தார்த் ஷெனாய்மூன்றாவது பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+